பக்கம் எண் :

நிலையும் நினைப்பும்19

மகாராஜாவிடம்   சென்று அங்குள்ள சில ஆதார ஏடுகளைப் பார்த்து
ஆராய்ச்சி   செய்து    புதிய  சாந்தி  பருவத்தை  இந்திய  சர்க்கார்
வெளியிடப் போகிறார்களாம், எப்படி இருக்கிறது ஆராய்ச்சி!
 

வெளிநாடுகளில்     அமெரிக்காவில் மேகத்தை மழை பெய்விக்க
வைப்பதற்கு   மேகங்கள்   ஆகாயத்தில்  உலவிக்  கொண்டிருக்கும்
பொழுது  விமானத்தின்  மூலம்  அவைகளின்  மீது பனிக்கட்டிகளை
வீசினால்  மேகம்  குளிர்ச்சி தாங்காமல் மழைத் துளிகைளைத் தரும்.
பத்தினி  பெய்  என்றால்  பெய்கிற  இந்த  நாட்டிலா மழை இல்லை.
மழையை  எப்படி  பெய்யச்  செய்வது  என்று  ஆராய்ச்சி செய்வது
பற்றியோ அரசாங்கத்தாருக்குக் கவலையில்லை. அமெரிக்காவில் மழை
வேண்டிய  பொழுது  பயிருக்குத் தர வானை நோக்கிக் கொண்டிருக்க
முடியாது.  தேவைப்பட்ட  பொழுது  மழையைப்  பெற ஒரு மார்க்கம்
வேண்டும்  என்று ஆராய்ச்சி செய்து,  விமானத்தைக் கொண்டு மேகக்
கூட்டங்களின்மேல்   பனிக்கட்டிகளை    வீசி   மழை   பெய்விக்கக்
கண்டுபிடித்திருக்கிறார்கள்.    இன்னும்    மேகத்தையே   உண்டாக்க
ஆராய்ச்சி    செய்துகொண்டிருக்கிறார்களாம்.   இந்தியாவில்   மழை
இல்லாததால்  பயிர்கள்  வாட,  பயிர்கள் வாடுவதால் மக்கள் வாடுகிற
நேரத்தில்   இந்திய   சர்க்கார்   மகாபாரதத்தில்  சாந்தி  பருவத்தை
ஆராய்ச்சி  செய்கிறார்கள்.   அமெரிக்காவில்  பருவமழை  தவறினால்
பருவ   மழையைத்    தேவைப்பட்டபோது   உண்டாக்க  ஆராய்ச்சி
செய்கிறார்கள்;   இரண்டு   நாடுகளைப்பற்றியும்  உங்களுக்கு  என்ன
நினைப்பு    தோன்றும்.    மக்கள்   மழையில்லாமல்   பட்டினியால்
சாகும்பொழுது   மழையைப்பற்றி    ஆராய்ச்சி   செய்யாமல்  சாந்தி
பருவத்தைப்  பற்றி ஆராய்ச்சி  செய்யும் சர்க்காரைப்பற்றி பிறநாட்டார்
என்ன   நினைப்பார்?  நம்   நிலையைக்  கண்டு  எள்ளி  நகையாட
மாட்டார்களா?  இது  போகட்டும்.   இந்த நாட்டில் கொண்டாடப்படும்
விழாக்களைக்   கவனியுங்கள்;    மேல்நாட்டில்   கொண்டாடப்படுகிற
விழாக்களையும் கவனியுங்கள்;இந்த  நாட்டில் கொண்டாடப்படுகிற எந்த
விழாவாவது  ஒரு லட்சியத்தைப்  பற்றிப் போதனை புரிவதாக அல்லது
நினைவூட்டுவதாக அல்லது உலகத்தின் கவனத்தை இழுப்பதாக