இருக்கிறதா என்று பாருங்கள். பிரான்சு நாட்டில் பிரஞ்சுப் புரட்சியைப் பற்றி விழாக் கொண்டாடுவார்கள். இரஷியாவில் மே தினத்தைப்பற்றி விழாக் கொண்டாடுவார்கள். ஒவ்வொன்றும் ஒரு வெற்றி விழாவாகும். அந்தந்த நாடும் அந்தந்த நாட்டு மக்களுமின்றி உலக மக்கள் அனைவரும் கொண்டாடும் திருநாளாகும்; ஏன்? அந்த விழாக்கள் மக்களை அறியாமையிலிருந்தும் அடிமையிலிருந்தும், சுரண்டலிலிருந்தும் மீட்டு அறிவு, சுதந்திரம், சுகம் ஆகியவைகளை அடைய நடத்திய வீரப் போராட்டத்தைப் பற்றியும் போராட்டத்தில் கிட்டிய வெற்றியைப் பற்றியும், நினைவூட்டும் மகிழ்ச்சியான நாட்களாகும்.
|
இங்கு இம்மாதம் விநாயகசதூர்த்தி நடந்தது. உங்களுக்குத் தெரியும் அந்த விழாவால் வீழ்ந்த நாடோ அல்லது சமுதாயமோ, மீண்டும் எழுந்து நடமாட வழியுண்டா? அந்த விழாவால் அறியாமை நீங்குவதைப்பற்றியோ மக்கள் கொள்ள வேண்டிய அவசியம் பற்றியோ வற்புறுத்தப்படுகிறதா? இத்தகைய விழாக்களால் நாடு விமோசனமடைய மார்க்கமுண்டோ? இரண்டு விழாக்களைப்பற்றியும் ஒரே பத்திரிக்கையில் படிக்கிறார்கள். பிரஞ்சுப் புரட்சி பிரான்சு நாட்டில் கொண்டாடப்பட்டதையும் படிக்கிறார்கள். நம் நாட்டில் விநாயக சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதையும் படிக்கிறார்கள். யாராவது சிந்தித்தார்களா ஏன் நம் நாட்டில் மாத்திரம் விழா இவ்வளவு மோசமான நிலையில் இருக்க வேண்டும் என்று; ஏன் சிந்திக்க வில்லை? பாமரர்களிடம் படிப்பு இல்லை; படித்தவர்களிடம் பண்பு இல்லை. இன்று, சொல்லித்தரப்படுகிற பாடமுறையே மாற்றி அமைக்கப்பட வேண்டும். சிந்தனையைக் கிளறும்படியான எந்தத் திட்டமும் நம் கையில் இல்லை. ஜெர்மனி நாட்டில் ஹிட்லர் தம் ஆட்சியில் கல்வித்துறையில் புகுத்திய புதிய முறைதான் பிள்ளைப் பருவத்திலே ஜெர்மனிய நாட்டு இளைஞர்களுக்கு ஹிட்லரிடம் பற்றும் இராணுவத்தினிடம் மரியாதையும், நாசிசத்திடம் (Naziam) நம்பிக்கையும், கொள்ளச்செய்தது. நாமும்தான் பிள்ளைகளுக்குக் கணக்குப் போடுகிறோம். நமது பிள்ளைகளிடம் "நான் நான்கு மாம்பழங்கள் வைத்திருந்தேன். அதை இரண்டு |