பக்கம் எண் :

22பேரறிஞர் அண்ணா

அவதரித்த  புண்ணிய   பூமி்; இருந்தும் பஞ்சம்; மக்கள் பட்டினியால்
வாடுகிறார்கள்;   சிலர்  இறக்கிறார்கள்.   சர்க்காரோ  சாந்தி  பருவ
ஆராய்ச்சி     செய்கிறார்கள்.     தொழிற்சாலைகளைப்     பற்றிக்
கவலைப்படவில்லை. விஞ்ஞானத்தைப்பற்றிக் கவலைப்படவில்லை.
 

சிலர்   கூறலாம், "விஞ்ஞானத்தைப்பற்றி, கவலைப்பட வில்லையா?
விஞ்ஞானத்தை  யாரும்  இந்த  நாட்டில்  போற்ற  வில்லையா? இது
அடாது!   ரேடியோவும்,   மின்சாரமும்,  டெலிபோனும்,  சினிமாவும்
விஞ்ஞான   சாதனங்களல்லவோ?   அவைகள்   இங்கு  இல்லையா.
ஏராளமாக  உள்ளனவே,"  என்று  கூறலாம். விஞ்ஞான சாதனங்களை
நாம்  பார்ப்பதற்கும்  அனுபவிப்பதற்கும்  எவ்வளவோ  வேறுபாடுகள்
உண்டு. மேலாகப் பார்த்தால் சில விஞ்ஞான சாதனங்களைக் கொண்ட
நம்   நாடும்   விஞ்ஞானத்தில்   முன்னேறியிருப்பதாகத் தோன்றும்.
கூர்ந்து  கவனித்தால்தான் நம் நாட்டில் எவ்வளவு தூரம் விஞ்ஞானம்
போற்றப்படுகிறது   என்பது   தெரியும்.  ரேடியோ  ஒரு  விஞ்ஞான
சாதனம்.  அறிவு  முன்னேற்றத்தைக்  குறிக்கும் கருவி.  அதன் மூலம்
இலண்டனில்,     கல்கத்தாவில்,     ரெங்கோனில்,     ருஷ்யாவில்,
டோக்கியோவில்       என்னென்ன        நடக்கின்றன     என்று
தெரிந்துகொள்ளலாம்.   ஆனால்   ஜனங்கள்  திருத்தணி,  திருப்பதி,
திருவாரூர்,    சிதம்பரம்   போன்ற   திவ்ய   சேஷத்திரங்களையும்,
ஆங்காங்கு  நடக்கிற  விழாக்களையும்  பற்றித்  தெரிந்து  கொள்ளக்
காட்டுகிற  அளவுக்கு  ஆசையை,  ரேடியோவின்  மூலம்  லண்டன்,
கல்கத்தா.   ரெங்கோன்   ஆகியவைபற்றித்   தெரிந்து,  கொள்வதில்
காட்டமாட்டார்கள்.   ரேடியோ   இருந்து   என்ன   பயன்?   எந்த
முற்போக்குக்காக, லட்சியத்திற்காக ரேடியோ கண்டுபிடிக்கப் பட்டதோ,
அந்த  முற்போக்கு  லட்சியம் நம்மவரால்  கடைப்பிடிக்கப்படவில்லை.
ரேடியோ  இருக்கட்டும்  திடீரென்று  மாலை  நேரத்தில் ஆகாயத்தில்
விமானம்   பறக்கிறது   என்று   வைத்துக்   கொள்வோம்.   சாலை
ஓரத்திலுள்ள  பெரியவர்  அண்ணாந்து பார்ப்பார். கண்ணில் ஒருவித
மிரட்சி  தோன்றும். இந்த மாறுதலுடன் அவர் நினைப்புக்கும், ஆகாய
விமானத்திற்குமுள்ள   தொடர்பு   அறுந்துவிடும்.   அவர்   உடனே
விமானத்திற்குப் பக்கத்தில்