பக்கம் எண் :

நிலையும் நினைப்பும்23

பறக்கும்       கருடனைப்    பார்ப்பார்.  பார்ப்பதற்குக்  கொடுத்து
வைத்தோமே     என்று     சந்தோஷப்    படுவார்.    கன்னத்தில்
போட்டுக்கொள்வார்.  அத்துடன்  நிற்கமாட்டார்.   தன் பக்கத்திலுள்ள
சிறுவனையும்    கருடனைப்    பார்க்கச்     சொல்லி,   கன்னத்தில்
போட்டுக்கொள்ளச்    சொல்லுவார்.   விமானத்தையும்   பார்க்கிறார்;
கருடனையும் பார்க்கிறார். கருடனிடம் கவனம்  செலுத்துகிற அளவுக்கு
விமானத்திடம்   காட்டமாட்டார்.   விமானம்   இந்த  நாட்டில்  ஒரு
விஞ்ஞானக்  கருவியாக  இருந்து  என்ன  பயன்? மேல்நாட்டில் ஒரு
சிறுவன் ஆகாய விமானம் பறக்கிறதைப் பார்க்கிறான் என்று வைத்துக்
கொள்வோம்.    அவன்   என்ன   நினைப்பான்?   அதன்   வால்
தட்டைப்பார்,   புதுமாதிரியாக  இருக்கிறது.  அதில்  போட்டிருக்கும்
கொடியைப்பார்.   நம்முடைய   தேசத்துக்கொடி.  அது  என்னுடைய
அப்பா  கட்டிய  விமானம்.  அதை  ஓட்டுபவன் விமானப் படையில்
சேர்ந்த  அண்ணனா யிருப்பானோ என்றெல்லாம் யோசிப்பான். ஏன்?
அவன் நாட்டு நிலையும் நினைப்பும் ஒன்றாய் உயர்ந்திருக்கிறது.
 

இங்கோ     நிலை    உயர்ந்திருந்தும், நினைப்பும் உயரவில்லை.
மூன்றடுக்கு  மாடியில்  படிக்கட்டுகளைக்  கட்டும்  தொழிலாளி நிலை
உயர்ந்திருந்தும்  நினைப்பு   உயராதிருந்ததற்கு, அவன் விதியின்பால்
கொண்ட  நம்பிக்கை  காரணமாயிருப்பதைப்போல  இந்த நாடு நிலை
உயர்ந்திருந்தும்  நினைப்பு  உயராததற்குக்  காரணம்  மூடநம்பிக்கை.
நினைப்பு,  நிலை  உயர்ந்த   அளவுக்கு உயருவதற்கு ஒரே மார்க்கம்,
பகுத்தறிவைப்  பரப்ப  வேண்டும்.  பாடத்திட்டத்திலே  நான் முன்பு
கூறியதுபோல,   பகுத்தறிவைப்  புகுத்தும்  தீவிரமான  ஒரு  திட்டம்
வகுக்கப்படாத  வரையில்   பகுத்தறிவும்  பரவாது;  நமது நினைப்பும்
உயராது.
 

நமது     நிலை   உலக  மன்றத்தின்  முன்பு  உயர்ந்திருக்கிறது.
பிரான்சைவிட,    இ்த்தாலியைவிட,   கீரீசைவிட,  ஜெர்மனியை  விட,
ஸ்விட்சர்லாந்தைவிட   கீழாகக் கருதப்பட்ட நாட்டிற்கு, ஒரு பொழுதும்
சூரியன்    அஸ்தமிப்பதில்லை   என்ற  நிலை  பெற்றிருந்த  பெரும்
சாம்ராஜ்யத்தைக்    கொண்டிருந்த   பிரிட்டிஷார்   150   வருடமாக
ஆண்டுவிட்டுக் கடைசியில்