உதாரணமாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து மாணவர்கள் சமூக சேவை செய்வதற்காக வடாற்காடு ஜில்லாவிலுள்ள ஒரு கிராமத்திற்குச் செல்லுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். மாணவர்கள் அவ்வூர் ஸ்டேஷனை விட்டு இறங்கிக் கிராமத்திற்குள் நுழைகிறார்கள். நுழைந்த மாணவர்கள் அங்குள்ள சில கிராமத்தார்களைப் பார்த்து, "இவ்வூரில் என்ன விசேஷம்" என்று கேட்பார்கள். உடனே "எங்கள் ஊரில் வீடுகள் சுகாதார முறைப்படி கட்டப்பட்டிருக்கும். எங்கள் ஊரில் திருடர் பயமில்லை, எங்கள் ஊரிலுள்ள இளைஞர்கள் பலசாலிகள், ஒரு ஆஸ்பத்திரி இருக்கிறது. ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது. அதில் உள்ள உபாத்தியாயர் கெட்டிக்காரர். ஆண்டுக்கொரு தடவை விளையாட்டுப் பந்தயம் நடத்துவோம். ஒரு பூங்கா இருக்கிறது. ஒரு கண் காட்சி சாலை இருக்கிறது"- இதுவல்ல பதில். அவர்கள் அளிக்கிற பதில் மனதிலே மகிழ்ச்சிக்குப் பதில் திகிலை உண்டாக்கும். அவர்கள் கூறுவார்கள். |