பக்கம் எண் :

நிலையும் நினைப்பும்29

தெரியுமா?"     என்று   கேட்பார். இவர்கள் நாங்கள் படித்ததில்லை
என்பார்கள். கிராமத்துத் தலைவர் உடனே சொல்லுவார். 'உங்களுக்குப்
புராணங்களிடம்   நம்பிக்கை  யில்லை  என்று  சொல்லுங்க.  நீங்கள்
இராவணனுக்கு  10 தலை என்பது கவியின் கற்பனையாகத் தானிருக்க
வேண்டும்   என்று   கூறுவீர்கள்.   கிராமத்துத்  தலைவர்.  உடனே
முடிவுகட்டி விடுவார்.
 

இவர்கள்  ஒன்று இராமாயணம் படிக்காதவர்களாயிருக்க வேண்டும்
அல்லது  இப்படி  ஈரோட்டுபக்கம்போய் வந்திருக்க வேண்டும். என்று
கிராமத்து  மக்கள்  எந்த விளக்கத்தைத் தந்தாலும் நம்பமாட்டார்கள்;
நம்பக்       கூடாததை       நம்புவார்கள்;      தெரிந்துகொள்ள
அவசியமில்லாததைத்  தெரிந்துகொண்டிருப்பார்கள்; தெரிந்து கொள்ள
வேண்டியதைத்  தெரிந்து  கொண்டிருக்க  மாட்டார்கள்.  அவர்களை
நீங்கள்   கேட்டுப்பாருங்கள்.   அமெரிக்காவின்   தலைநகரம்   எது
தெரியுமா?   தெரியாது.  ருஷ்யாவின்  தலைநகரம்  எது?  தெரியாது.
பெர்லின் எங்கு இருக்கிறது, தெரியுமா? தெரியாது. பிரிட்டனின் பிரபல
தொழிற்சாலை  எது  தெரியுமா? தெரியாது. மடகாஸ்கர் எங்கிருக்கிறது,
தெரியுமா?   தெரியாது.   கடலுக்குள்   போகிற  கப்பல்  தெரியுமா?
தெரியாது.  சரி,  எமதர்மனுடைய  வாகனம் எது தெரியுமா? "அதாங்க
எருமைக்கடா"  என்று  கூறுவார்கள்.  எப்படி  இருக்கிறது  அவர்கள்
அனுபவம்?   எவ்வளவு   வேறுபாடு   நம்முடைய   நினைப்புக்கும்
அவர்களுடைய  நினைப்புக்கும்?  பிரபல  தலைநகரங்களைப்  பற்றி,
பிரபல     தொழிற்சாலைகளைப்     பற்றி,    பிரபல    விஞ்ஞான
சாதனங்களைப்பற்றி,  தெரிந்து கொண்டிராதவர்கள் மேலோகத்திலுள்ள
எமனுடைய    வாகனத்தைப்பற்றித்   தெரிந்து  கொண்டிருக்கிறார்கள்.
தெரிந்து   கொள்ள  வேண்டியதைத்  தெரிந்து  கொள்ளாதது  பற்றி
வெட்கப்பட    மாட்டார்கள்;   தெரிந்து   கொள்ள   ஆசைப்படவும்
மாட்டார்கள்.