பக்கம் எண் :

நிலையும் நினைப்பும்33

ஏரோப்ளேன்        கண்டுபிடித்தவர்களுடைய         பெயர்கள்
நர்த்தனமாடுவதில்லை.  ரயில்  கண்டுபிடித்தவர்களுடைய  பெயர்கள்
நெஞ்சில்    நடமாடுவதில்லை.    விஞ்ஞானம்    இந்த   நாட்டில்
விழலுக்கிறைத்த     நீராகிவிட்டது.     பாலைவனத்தில்     வீசிய
பனிக்கட்டிபோல,   செவிடன்   கேட்ட  சங்கீதம்போல விஞ்ஞானம்
மதிப்பற்றிருக்கிறது.
 

மதிப்புற்றிருக்க வேண்டிய பொருள் மதிப்பற்றிருப்பது நல்லதல்ல?
விஞ்ஞானம்   மதிப்புப்   பெற  மாணவர்கள்  உழைக்க  வேண்டும்.
மாணவர்கள்  மக்களிடம்  சென்று அவர்கள் மனதிலே உள்ள மாசை
நீக்கவேண்டும்.    மனதிலுள்ள    மாசை   நீக்கிப்   பகுத்தறிவைப்
பரப்பிவிட்டுப்   பிறகு  விஞ்ஞானத்தைப்  பற்றிப்  பிரசாரம்  செய்ய
வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் மனம் தெளிவடைவர்; அறிவைப்
போற்றுவார்கள்;   அஞ்ஞானத்தைக்   கைவிடுவார்கள்,  உண்மையை
நம்புவார்கள், பொய்யை நம்பமாட்டார்கள்.
 

இதுவரை     நான் பொதுவாக இந்தியா - குறிப்பாக - தமிழ்நாடு
மக்கள்   நினைப்பு,   நிலை   உயர்ந்த   அளவுக்கு   உயரவில்லை
தாழ்ந்திருக்கிறது  என்பதையும்,  தாழ்ந்ததை  உயர்த்தப் பகுத்தறிவுப்
பிரச்சாரம்     என்ற     ஒரே    மார்க்கந்தான்    உண்டென்றும்.
மாணவர்கள்தான்         அம்மார்க்கத்தைக்        கடைப்பிடிக்கத்
தகுதியானவர்கள்  என்றும், உடனே சர்க்கார் மக்களுக்கு மாணவர்கள்
அந்தப்  பணியை வெற்றிகரமாக செய்து முடிக்க ஒரு திட்டம் வகுக்க
வேண்டும்  என்றும்  கூறினேன்.  ஆகையால்  சர்க்கார் பகுத்தறிவுப்
படையைக்  கிளப்ப  வேண்டும்;  அந்தப் படையைத் தடையில்லாமல்
இந்தப் பல்கலைக்கழகம் தரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
 

அப்படை     இங்கு உண்டு, அப்படையினர் நன்கு படித்தவர்கள்,
பண்புள்ளவர்கள், நல்ல பிரச்சாரப் பழக்க முள்ளவர்கள்; பகுத்தறிவை
ஆயுதமாக   உடையவர்கள்;   பயமறியாதவர்கள்;   இவர்களால்தான்
வீழ்ந்த   சமுதாயத்தை   உயர்த்த   முடியும்.  இதுதான்  ஒரேபடை,
இதுதான்