எண்ணுவேன்' என்று சொல்வதை. தமிழிலே கவிதைகள்; தமிழிலே நாடகங்கள்; தமிழிலே இசைகள். இவற்றை யாரும் எங்கு சென்றாலும் பார்க்கலாம். நேற்றுக் கூப்பிட்டிருந்தால் 'வர மாட்டேன்' என்று இன இறுமாப்புடன் இருந்திருப்பவர்கள் கூட, இன்று தாமும் தமிழர், தமிழர் இனம் என்று சொல்லிக் கொள்ளமுற்படுகிறார்கள். ஆனால், இந்த நிலை என்றும் மாறாமல் நிலைத்திருக்குமா? |
என்ன! இவ்வளவு நாளுமில்லாததோர் வியப்பு, ஓர் உணர்ச்சி, தாய்மொழிப்பற்று, தன்னினப்பற்று, தமிழர்களிடையே ஏற்பட்டதற்கு, தமிழன் தன்நிலை உணரவந்ததற்குக் காரணம், இந்தப் புரட்சிக்கவி பாரதிதாசன் நேற்று இல்லை; இன்று, இருக்கிறார் என்று சொல்லுவேன் என்று நீங்கள் கருதினால் அப்படிச் சொல்பவனல்லன். அவருக்கு முன்னால் இருக்கும் பெயரே, அவருக்கு முன் மாபெருங்கவி பாரதியார் இருந்தார் என்பதை நினைவூட்டுகிறது. கவிகளும் புலவர்களும் இதற்கு முன் இருந்த இழிநிலைக்கும், தமிழனிடம் தமிழர் பற்றுக் கொள்ளாதற்கும் காரணம் : தமிழ்நாடு என்றால், அது குறுகிய மனப்பான்மை என்றும், தமிழ்மொழி என்றால் அது உத்தியோகத்திற்கு லாயக்கானதல்ல வென்றும், தமிழ் படித்த ஒரு சில வட்டாரங்களிலே உலவி வந்ததும், தமிழ்நாட்டின் எல்லையைக் குறித்தால், தமிழனுடைய தனித்தன்மையைக் குறித்தால், நாம் நாட்டுக்குச் செய்கின்ற நாசகாரியங்கள் என்றும் தவறாக, தெரியாமல், பாமரர்களும், படித்தவர்களும் கருதினதும் தான் ஆகும். |
தெரிந்து, பாமரர்களுக்கப் பரிந்து பேசுவது போல, நடிக்கும். நயவஞ்சகர்கள் நாட்டிலே உண்டாக, எத்தர்களும், ஏமாளிகளும் ஏற்பட்டனர். ஏமாற்றி வாழ்பவன் எத்தன். ஏமாறுபவன் ஏமாளி. தன்னுணர்வு அற்ற மக்களால் தமிழும், தமிழ் அறிஞர்களும், போற்றப்படாமல் மூலை முடுக்குகளிலே தூங்கிக் கிடந்தனர். |