பக்கம் எண் :

ஏ, தாழ்ந்த தமிழகமே!39

ஆனால்     இன்று,  தூங்குகிறவர்களைத் தட்டி எழுப்புகின்றனர்.
துக்கப்படுகிறவர்களுடைய   துயரத்தைத்  துடைக்கின்றனர்.  தேம்பித்
திரியும்   கவிவாணர்களைத்  தேடிப்பிடித்து  அவர்களை  மார்போடு
அணைத்து  உச்சி மோந்து முத்தம் கொடுத்து உள்ளம் பூரிக்கின்றனர்.
இவனா,   இவன்   என்   இனத்தவன்.  அது  தமிழா?  அமிழ்தினு
மினியதல்லவா?  அவனா,  அவன் ஓவியக்காரன்; அவன் ஓவியங்கள்
ரவிவர்மா   படத்துடன்  போட்டியிடும்.  அவன்  தமிழிசைவாணனா?
தமிழிசை  எந்த  விதத்திலும்  தெலுங்கைவிடக்  குறைந்த  தல்லவே!
அவன்  நடனக்காரன்;  அவனது  நடனம்  வடநாட்டு நடனத்தைவிட
ரம்யமாக   இருக்கும்!   அவன்   நடிகன்,  மேல்  நாட்டு  நடிகனும்
அவனிடம்    தோற்றுவிடுவான்.    தமிழ்நாட்டு    நடிகன்    நமது
இருதயத்தைத் தான் நடிக்கும்     நாடக மேடையாக்கிக் கொள்கிறான்.
அவன் கவிஞன், அவன்  பாக்களில்  ஓர்  அடிக்கு, மேல் நாட்டிலே,
ஓராயிரம்    பொன்         கொடுப்பர்   என்று   இன்று   தமிழ்
அறிவாளிகளை,    சிற்பிகளை,  சிந்தனையாளர்களை,   கவிஞர்களை.
கலைவாணர்களைத்  தமிழகம் போற்றுகின்றது.  இந்த  நிலை  நேற்று
இல்லை;   இன்று  இருக்கிறது;  நாளை    நீடித்திருக்க   வேண்டும்.
நிலைத்திருந்தால்தான்,   ஒரு    பாரதிதாசன்    அல்ல;  எண்ணற்ற
பாரதிதாசர்கள்   தோன்றுவார்கள். அவர்களைக்   கண்டு,  அவர்கள்
காட்டிய   வழிகளைத்  தமிழகமும்  தமிழரும் பின்பற்றிப் பயனடைய
ஏதுவாகும்.
 

சங்க இலக்கியம்
 

கவிஞர்களையும், மற்றவர்களையும் அன்று போற்றாததற்கும், இன்று
போற்றுதற்கும்   இன்னுமொரு  காரணமுண்டு. சங்க இலக்கியங்களிலே,
நமது கண்ணும் கருத்தும் படாதபடி திரையிட்டு வந்தார்கள்.
 

உங்களில்    பலர் சங்க இலக்கியங்களைப் படித்திருக்கலாம். சிலர்
புரிந்து கொண்டிருக்கலாம்; சிலர் புரிந்தது போல் பாவனை காட்டலாம்.
நான்    சங்க     இலக்கியங்களைப்    படித்தவனல்லன்.   அல்லது
படித்தவனைப்    போலப்   பாவனை  செய்பவனுமல்லன்.  அதற்காக
வெட்கப்படப்     போவதுமில்லை.   சங்க   இலக்கியங்களை   நான்
படிக்கவில்லை என்றால்,