பக்கம் எண் :

4பேரறிஞர் அண்ணா

வியர்வையைப்     பார்க்காமல்    கஷ்டப்பட்டுக் கட்டிடம் கட்டியும்
கடைசியில்  அந்த  உப்பரிகையில்  உல்லாசமாக உலவப் போகிறவன்
சீமான்;  அவனல்ல.  இந்த உண்மையைத்  தொழிலாளியும் அறிவான்.
மாடிப்  படிக்  கட்டுகளைக்  கட்டும்பொழுது,  அதன்  வழியாக  ஏறி
உலவப்  போகிறவன்  வேறொருவன்;  தானல்ல  என்பதைத் தெரிந்து
கொண்டுதான்  கட்டுவான்.  நிலைக்கேற்ற  நினைப்பில்லை. திருட்டுத்
தனமாகக் கனிதேடி மரம் ஏறியவனுடைய  நினைப்பு எப்படியிருக்கும்?
எந்த  அளவுக்கு  அவன் நிலை உயர்ந்திருக்கிறதோ அந்த அளவுக்கு
அவன்   நினைப்பும்  தாழ்ந்திருக்கும்.  முதலில்  கனிபறித்து,  பிறகு
அவசர     அவசரமாகத்       தோட்டத்துக்குச்     சொந்தக்காரன்
வந்துவிடுவானோ, வந்துவிட்டால்  என்ன செய்வானோ என்ற பயத்தில்
செங்காய்களைப்  பறித்து, அதன்  பின் காய்களையும் பறிப்பான். கனி
பறிக்கையில்  அவனது  பாரத்தால்   மரம்  குலுங்கும்பொழுதெல்லாம்
அவன்   மனம்  பயத்தால்  குலுங்கும்.   அடிக்கடி  தோட்டத்துக்குச்
சொந்தக்காரன்  வந்தால்  எப்படிக்  குதித்து  எங்கு  ஓடுவது  என்று
நினைப்பான்.  அவன் இருப்பது மரத்தின்  உச்சியில்; ஆனால் அவன்
மனம்  இருப்பது  தரையில்;  இங்கும்   நிலைக்கேற்ற நினைப்பில்லை.
காரணம்,    எப்படி    மூன்றாவது    அடுக்கு   மாடியில்   உலவும்
தொழிலாளிக்கு  அந்த  மாடி வீடு சொந்தமில்லையோ, அதுபோல மர
உச்சியில் கனி பறிப்பவனுக்கும் அந்த மரம் சொந்தமில்லை.
 

இதேபோலத்தான்   ஒரு நாட்டினுடைய நிலையும் நினைப்பும். ஒரு
நாட்டின்    நினைப்பைப்    பார்த்துதான்    அந்நாட்டின்    நிலை
மதிப்பிடப்படும்.   மக்களுடைய  நினைப்புகளின் மொத்தமே (கூட்டுத்
தொகையே)   ஒரு   நாட்டின்  நினைப்பாகும்  என்பதை  ஒருகணம்
ஞாபகப் படுத்திக்  கொள்ள வேண்டும். இப்பொழுது இந்தியா என்னும்
துணைக்கண்டம்   அதற்குரிய மக்களால் ஆளப்படுகிறது. இந்தியாவின்
தலை    விதியை    நிர்ணயிப்பது   இந்தியர்களே   என்ற   நிலை
ஏற்பட்டிருக்கிறது.   இந்த   நாட்டை   ஈடேற்றும்   எந்தத்  திட்டம்
செல்வாக்குப்பெற    ஆரம்பித்தாலும்   அதற்கு   எந்த   ஆங்கிலர்
தடைக்கல்லாய் இருப்பதாகச்