சொல்லப்பட்டதோ, எந்த ஆங்கிலர் முட்டுக்கட்டையாக இருப்பதாகச் சொல்லப்பட்டதோ, எந்த ஆங்கிலர் எதிரியாக இருப்பதாகச் சொல்லப்பட்டதோ, அந்த ஆங்கிலர் இப்பொழுது ஆட்சியில் இல்லை. அந்நிய ஆட்சி மறைந்து தன்னாட்சி தோன்றியிருக்கிறது. நம்மை ஆளுவது நம்மவரே! பிற நாட்டாரல்ல!! இது நல்ல நிலை, நிலை உயர்ந்திருப்பதாகவே பொருள். ஆகையால் நியதிப்படி நினைப்பும் உயர்ந்திருக்க வேண்டும். |
மூன்றாவது அடுக்கு மாடியில் உலவும் தொழிலாளிக்கு அந்த மாடி வீடும், மர உச்சியில் கனி பறிப்பவனுக்கு அந்த மரமும் சொந்தமில்லாததால் அவர்கள் நிலை உயர்ந்திருந்தும் நினைப்பு தாழ்ந்திருந்தது. அவர்களே அவர்கள் கட்டுகிற வீட்டுக்கும், ஏறுகிற மரத்திற்கும் சொந்தக்காரர்கள் என்ற நிலை ஏற்பட்டிருந்தால் அவர்கள் நினைப்பும் உயர்ந்திருக்கும். இது நியதி. இப்பொழுது இந்தியா இந்தியருக்குச் சொந்தமாகி இந்தியாவை வறுமையாக்குவதோ, வளமாக்குவதோ இந்தியர் கையிலேயே இருக்கிறது. சொந்தமான நாட்டில் சுதந்திரமாக வாழும் நிலை ஏற்பட்டுவிட்டால், நினைப்பு இயற்கையாக உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் நாட்டின் நிலை உயர்ந்த அளவுக்கு நினைப்பு உயர்ந்ததாகத் தெரியவில்லை. |