பக்கம் எண் :

ஏ, தாழ்ந்த தமிழகமே!41

சொல்லியும்      வருகிறார்கள்.   அதன்  மூலம் உண்மைக் கவிகள்,
உயிர்க்   கவிகள்   சங்ககாலப்   புலவர்கள்   மறைக்கப்படுகிறார்கள்
என்பதை   மறந்து   விடுகிறார்கள்.   இன்னும்   தெளிவாகக்   கூற
வேண்டுமானால்,  கம்பனை  எந்த  அளவுக்குப்  பொது  மக்களுக்கு
அறிமுகப்படுத்தினார்களோ,     அந்த    அளவுக்குச்    சங்ககாலப்
புலவர்களை    அறிமுகப்   படுத்தவில்லை.   கம்பனைத்   தெரிந்த
பொதுமக்கள்தாம்   அதிகம்  இருப்பார்களே  தவிர,  இளங்கோவைப்
பற்றித்     தெரிந்தவர்கள்     கொஞ்சமாகத்தான்     இருப்பார்கள்.
வேண்டுமென்றால்,  தில்லையில்  ஓர்  ஓட்டுப்  பெட்டியை வைத்துப்
பிரசாரமில்லாமல்,   அப்படி   இருந்தால்   இரு  பக்கமும்  நடத்தி,
கம்பனுக்கும், இளங்கோவுக்கும் ஓட்டுப்போடச் சொன்னால், தேர்தலில்
கம்பன்தான்  வெற்றி பெறுவான். ஆனாலும் நாம் நமது கற்பனா சக்தி
முன்பு    இருவரையும்   நிறுத்திப்   பேசச்   சொன்னால்,   கம்பர்
இளங்கோவைப் பார்த்து 'எனக்கு உயிர் ஊட்டிய உத்தமரே!' என்பார்;
'எனக்கு அணி அழகு தந்த ஆணழகரே' என்பார்.
 

திரைபோட்டு விட்டனர்
 

அகத்தையும்,  புறத்தையும் அதிலே காட்டப்பட்ட கருத்துகளையும்,
அணிகளையும்,   உவமைகளையும்   நாம்  அறியாமற்  போனதற்குக்
காரணம்,  பத்திரிக்கைகள் ஒரு  கவியைப்பற்றியே புகழ்வதும் ஒரு சில
கவிதைகளிலேயே   இது    எவ்வளவு   பழமையில்  அழுந்தியிருந்த
போதிலும்,    புதுமை    மிளிர்வதாகவும்,   ரசம்   ததும்புவதாகவும்
விளம்பரப்படுத்துவதும்,   மிதிலைச் செல்வியைப் பற்றியும் கோசலைச்
செல்வனைப்   பற்றியும்  மாதாந்தர  புத்தகங்களும்  வெளியீடுகளும்,
ஆண்டு  மலர்களும்,  பிரத்தியேகப் புத்தகங்களும் வெளியிடுவதுதான்
ஆகும்.
 

கம்பரையும்,    சேக்கிழாரையும்  அடிக்கடி  பலப்பல நிறங்களில்
காட்டுவதன்  மூலம் - கம்பராமாயணத்தையும் பெரிய புராணத்தையும்
தத்துவார்த்தங்களாலும்,     புதுமைக்    கருத்துக்களாலும்    காட்டி
நிலைநாட்டுவதன்   மூலம்   வள்ளுவனை   மக்கள்  அதிகம்  காண
முடியவில்லை.