பக்கம் எண் :

ஏ, தாழ்ந்த தமிழகமே!43

காரணம் இல்லாமல் இல்லை
 

ஏன் புரட்சிக் கவியைப் புத்துலகச் சிற்பியாக மக்கள் முன் கொண்டு
வந்து     நிறுத்தவதில்லையென்றால்,     அவருடைய     புதுமைக்
கருத்துக்களைக்  காணும்படி  மக்களைத்  தூண்டுவதில்லை யென்றால்
காரணமில்லாமல்   இல்லை.   மக்கள்  புரட்சிக்  கவியின்  உண்மை
உருவத்தைப்  பார்த்து  விட்டால்,  அவர்களால் தூக்கி வைக்கப்பட்ட
கவிகள்   தொப்பென்று   கீழே  விழுந்து  விடுவார்கள்,  கவிகளுக்கு
மதிப்புக்    குறையும்;    போற்றினவர்கள்    பிழைப்பும்    கெடும்.
இளங்கோவைப்  பற்றி  மக்கள்  அறிய ஆரம்பித்து விட்டால் சிலம்பு
நாட்டிலே   ஒலிக்க   ஆரம்பித்து   விட்டால்   கம்பனுக்கும்  கம்ப
ராமாயணத்துக்கும்   அவ்வளவு   மதிப்பும்   இராது.  மான்செஸ்டர்,
கிளாஸ்கோ முதலிய இடங்களிலிருந்து மெல்லிய துணிகள் வருகின்றன
என்றால்  லாங்கிளாத்துக்கு  அவ்வளவு  கிராக்கி  இருக்காது என்பது
மட்டுமல்ல;  சேலம்  ஆறு  -  ஏழு  முழ  வேட்டிகளுக்கும் மதிப்பு
இருக்காது.  ஆமதாபாத்  புடவைகள்  அமோகமாகக்  கிடைக்கின்றன
என்றால்   ஆரணங்குகளும்   பெங்களூர்ப்   புடைவையை  எப்படி
விரும்புவர்?    கம்பனைப்    பற்றி    நான்    குறை   கூறுவதாக
நினைக்கக்கூடாது.   உங்களிடமுள்ள  குறைகளை  நிவர்த்தி  செய்து
கொள்ளவேண்டும். ஒரு சிலரைப் போற்றுவதன் மூலம்தான் புகழடைய
முடியும்; நமது புலமை மிளிரும் என்ற நினைப்பு மறைய வேண்டும்.
 

பாண்டியன் பரிசு
 

இந்த    முறையில்   பாரதிதாசனின் பாண்டியன் பரிசு குறையைப்
போக்குவதாக    இருக்கிறது.     பாண்டியன்    பரிசு    சங்ககால
இலக்கியங்களிலுள்ள    உவமைகளையும்,   அணிகளையும்,   எளிய
நடையில்  எல்லோரும்  புரிந்துகொள்ளுமாறு இயற்றப்பட்டிருப்பதைக்
காணலாம்.   பாடலுக்கு  லட்சணம்  படித்தவுடன்  இலேசில்  புரிந்து
கொள்ளக்   கூடாது என்றும்,  புலமைக்கு  லட்சணம்  பிறர்  கண்டு
பயப்படவேண்டும் என்றும் கருதுகிறார்கள்.
 

பாரதிதாசனின்  காவியத்தைப் பார்க்க, படித்து உணர இலக்கணம்
தேவையில்லை;   இலக்கியங்களைப்  படித்திருக்க  வேண்டுவதில்லை;
நிகண்டு தேவையில்லை; பேராசிரியர்கள்