காரியத்திலே ஈடுபடுகிற நாம், ஓட்டைச் சட்டியாயிருந்தாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி என்று கருதுகிறோம். கவைக்குதவுமா, கற்க நிகண்டு தேவையில்லையே! பாட்டிலே ஏதாவது எளிமையுடன் இனிமை மாத்திரம் கலந்து விடாமல் எழுச்சியும் கலந்திருக்கிறதா, புரிகிறதா, புரிந்து பயனடையலாமா என்று பார்க்கிறோம். நாம்தான் பெரும்பான்மை, அவர்கள் குறைந்த எண்ணிக்கை என்று சொல்லி ஓரிடத்தில் கூறுவதுபோலப் பாட்டைப் படித்தவுடன் புரிந்து கொள்ளும்படியாக இருக்க வேண்டும் என்பவரின் எண்ணிக்கை தான் அதிகம். கடின நடைக் கவிதைகளை விரும்புபவர் எண்ணிக்கை கொஞ்சந்தான், அவர்கள் பாரதிதாசனின் பாக்கள் எந்தச் சின்னங்கள் மட்டமானவை என்று தேடித் திரிபவர்கள். நாம்தான் சுவையை அப்படியே அனுபவிப்பவர்கள். பயனடைகிறோம்; காரணம் எளிய இனிய நடை. இதுவரை அவரது நடையைப் பற்றிச் சொன்னேன். அவர் எடுத்துக் கொள்ளும் பொருள் என்றால், அவர் கொடுக்கும் தலையங்கங்களென்றால், அவை புரட்சிகரமாயிருக்கும்; புதுமையாயிருக்கும். | இரண்டு நாக்குகள் | ஒரு காலத்திலே, தமிழகத்திலே சாலைகளையும், சோலைகளையும் கண்டுகளித்துச் சந்தனக் காடுகளிலே, சந்தம் அமைத்துப் பண் பாடினார்கள். பிற்காலத்திலே, அதாவது இடைக்காலத்திலே, வாழ்வு இந்த லோகம் அந்த லோகமாகப் பிரிந்தது, பேரம்பலம் சிற்றம்பலம் என்பதுபோல. மாயவாழ்வு மனித வாழ்வு என்று ஏற்பட்டது. இடைக்காலப் புலவர்களின் உள்ளங்களிலே ஒரே நேரத்தில் இரண்டு மாறுபட்ட காட்சிகள் தோன்றி மறைந்தன. ஒரே உதட்டில் இரண்டு நாக்குகள் புரண்டன. குன்றைப் பற்றிப் பாடுகின்ற நேரத்திலே அந்த லோகம், அந்த வாழ்வு என்ற எண்ணங்கள் தோன்ற, அந்தக் குன்று முருகனுடைய தோளாகவும், அதுவும் வள்ளியிடம் கொஞ்சிய தோளாகவும் காட்சியளித்ததே தவிர. மலைச்சாரலிலே வளைந்து ஓடும் ஆறு; கரடுமுரடான பாதை; அவற்றைத் தாண்டி மலை மீதிருந்து கீழே பார்த்தால் காடு தெரியும் காட்சி; காடுகளில் சிறுத்தையும், புலியும் |
|
|
|