உலவும் காட்சி; அங்கு வேடுவரும் வில்லியரும் ஆடுகிற வேட்டை, ஆகிய இயற்கை எழில், அந்த விநாடி தோன்றவில்லை. | கற்பனைக் கொலை | இன்று நாடக மேடைகளில் நடக்கிற வள்ளித் திருமணத்திற்கும். அதிலிருந்துதான் இது கற்பனையானதோ என்று எண்ணும்படியான ஓர் இயற்கை நிகழ்ச்சி சங்க இலக்கியத்தில் வர்ணிக்கப்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். பண்டைக் காலப் புலவர்களின் கள்ளங் கபடமற்ற உள்ளத்தையும், இடைக்காலத்திலே இரட்டை வாழ்க்கையினிடையே புராண மெத்தையில் புரண்ட புலவர்களின் உள்ளத்தையும், இந்தச் சிறு படப் பிடிப்புத் தெளிவாக்கும் என நம்புகிறேன். ஒரு தலைமகன் காட்டுக்கு வேட்டையாடச் செல்கிறான். தன் வேல் தைத்த யானை எப்பக்கம் ஓடிவிட்டது என்று தேடிக் கொண்டு வந்தவன் முன் ஓர் ஆரணங்கு எதிர்ப்படுகிறாள். நல்ல அழகி; பக்கத்திலேயே பளிங்கு நீரோடை. கட்டழகன் அந்த மங்கையை மணந்து கொள்ள இச்சைப் படுகிறான். மணந்து கொள்வதென்றால் இந்தக் காலத்தைப் போலப் பொருத்தம் பார்க்க ஐயரைத் தேடுவது தேவையில்லாதிருந்த காலம் அது. காதலர் இருவரும் கண்களால் பேசினார்கள். வாய் அச்சுப் பதுமை போலிருந்த போதிலும் அருகே சென்றான். வஞ்சி அஞ்சினாள். அஞ்சாதே அஞ்சுகமே என்றான். ஆனால், சற்று நேரத்தில் ஓர் அலறல் கேட்கிறது. அது என்னவென்று கேட்கிறாள், அந்த ஏந்திழையாள். அது என் வேல் வலிக்குத் தாங்க முடியாமல் பிளிரும் யானையின் குரல் என்கிறான். பாவைக்கு யானை என்றால் பயம் போலிருக்கிறது; 'ஐயோ யானையா! அச்சமாயிருக்கிற' தென்றாள். 'அச்சமானால் அருகே வா', என்றான்; வந்தாள். அணைத்துக் கொண்டான். திருமணம் முற்றிற்று!! | இந்த ஒரு சம்பவத்தைப் பிற்காலத்தில் வள்ளி கதையாக்கி, அந்த வீரனை வேலனாக்கி, கிழவனாக்கி, தேனும் தினைமாவும் கேட்டான் என்று சொல்லி, வளையற்காரனாக்கி விட்டார்கள். வைதீகத்தைப் புகுத்தி, மூடநம்பிக்கையை வளர்க்கும் |
|
|
|