நீளமென்னவென்றால் தெரியாது. ஊர்வசியும், ரம்பையும் சிறந்த நாட்டியக்காரிகள்; அவர்களிருப்பது தெய்வலோகம் என்றால், கேள்வி ஞானமே தவிர அனுபவமேது? பத்துத் தலை இராவணணைப் பற்றிப் பாடுகிறார்களெனன்றால், இராவணனைப் பார்த்ததேது? பரமசிவன் பார்வதியுடன் ரிஷபவாகன ரூபராய்த் திடீர் திடீரெனத் தோன்றி மறைகிறார் என்றால், என்றாவது கண்டதுண்டா? படித்ததை எழுதுகிறார். கேட்டதை ஒப்புவிக்கிறார். அதாவது ஒருவர் கேள்விப்பட்டு எழுதுவார்; சொல்லுவார். சொன்னதைக் கேட்டவர் அதையே எழுதுவார்; இது பரம்பரை என்பதே தவிர கண்டதை, பார்ப்பதை அனுபவபூர்வமாக எழுதுகிறார்கள் என்பதற்கில்லை. | சிந்தனை சொல்லிற்று | பாரதிதாசன் மாத்திரம்தான், தாம் கண்டதை எழுதுகிறார்; பார்த்ததை எழுதுகிறார், புரியாத விஷயங்கள் தெரியாத விஷயங்கள் வழிக்கே போகமாட்டார்; காணாத கடவுளைப் பற்றி எழுதமாட்டார்; இன்று இல்லாவிட்டாலும் நாளை பரிகாசத்திற்கு இடமாகும் என்று, நான் வேதாந்தத்தைப் பற்றிப் பேசினால் வேடிக்கையாய் இருக்கும். சங்கராச்சாரி பொருளாதாரத்தைப் பற்றிப் பேசினால் வேடிக்கையாயிருக்கும். மானையும் மடந்தையையும் பற்றிப் பாடவேண்டிய புலவர்கள், ஆறுமுகத்தைப் பற்றியும் ஆறுமுகத்தில் எந்த முகம் வள்ளிக்கு முத்தம் கொடுத்த சொந்த முகம் என்பதைப் பற்றியும், பரமசிவத்தின் வேலாயுதத்தைப் பற்றியும் அந்த வேல் மொட்டையாயிருந்தால், மேருமலையின் எந்தப்பாகம் தீட்ட உபயோகப்படும் என்பதைப் பற்றியும், பாடினால் வேடிக்கையாயிருக்கும் என்பது மட்டுமல்ல; ஏதோ ஒரு புலவர் தம் விருப்பம்போல் கதையளக்கிறார் என்றுதானே நினைக்க நேரிடும்! | பண்டிதர்களின் பரம்பரையிலே, பாரதிதாசனும் கொஞ்ச நாள் இருந்தார். கவிபாடினார், மற்றவர்களைப் போல, மயிலையும் முருகனையும் பற்றிப் பாட்டுகள் பாடினார். வள்ளியைப் பற்றி லாலிகள் பாடினார். |
|
|
|