அந்த ‘மாயம்' எந்த மயக்கத்தை மக்களிடம் உண்டாக்கிற்று என்றால் நாற்பது வயது ஆளைப் பார்த்து ‘என்ன சௌக்கியமாயிருக்கிறீ்ர்களா?' என்றால், சௌக்கியமா யிருக்கிறேன் இல்லை; என்று மேல் ஸ்தாயி இறங்கி கீழ் ஸ்தாயியிலே சொல்லுவான். அப்படிச் சொல்வதிலே சுரங் குறைந்திருக்குமென்பதோடு மட்டுமல்ல; பேச்சுடன் பெருமூச்சும் கலந்து வரும். அந்தக் கலப்புக் கேட்டவனுக்கே பயமும் கவலையும் உண்டாக்கி விடும். நல்லாயிருக்கிறேன் என்று சொன்னால் என்ன? மேல் நாடுகளிலே ஆங்கிலத்தில் ஹௌ டு யு டு என்றால், உடனே ஓ,கே, (நன்றாயிருக்கிறேன்) என்று சொல்லுவார்கள். அதனால்தான் அவர்கள் வாழ்கிறார்கள். நாம் ஏதோ இருக்கிறோம். பத்து வயதிலே பரதேசியாகி, பரலோகத்தைப்பற்றி. மாயத்தைப்பற்றி ‘காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா' என்று பாடுகிறோம். இந்த வாழ்வு, எத்தனை நாளைக்கு சார்? எல்லாம் மாயவாழ்வு; இது சதம் என்றா கருதுகிறீர்கள் என்று உண்மையிலேயே, தெரிந்தோ தெரியாமலோ எண்ணுகிறவர்கள் ஏட்டிலே தீட்டுகிறவர்கள் நம்மவரில் அநேகம் பேர் இருக்கின்றனர். |
‘சிவனே. அப்பா உனது பாதாரவிந்தம் எப்போது கிடைக்கும்?' என்று சிலைக்கு முன் கதறுகிற ஒரு சைவரிடம் ஒரு வேளை பரமசிவன் போல் யாராவது முன்னால் வந்து ‘பக்தா! பயப்படாதே; எழுந்திரு. உனது சிவநேசத்தைக் கண்டு உள்ளம் பூரித்தேன். இன்று முதல் நீ என்னுடன் இரண்டறக் கலந்து கொள்ளலாம் வா!‘ என்று அழைத்தால் போவதற்கு அவர் தயாராயிருப்பாரா? கேட்கிறேன், என்ன சொல்லுவார் அப்போது? ‘பிரபோ! தாங்கள் காட்சியளித்தது போதும்‘ என்பார். அப்பொழுதுதான் பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் தன் மகன், பி.எல். முதல் வகுப்பிலே பாசாக வேண்டாமா, என நினைப்பார். தன் ஒரே மகளுக்கு நல்ல இடத்தில் மணம் முடித்து வைக்க வேண்டுமே என்று |