நினைப்பார்; போன வருடம் பாங்கிலே போட்ட 9 ஆயிரம் ரூபாய் எப்போது 10 ஆயிரமாக ஆகும் என்று எண்ணுவார், ஈசனைப் பற்றிய எண்ணம் தோன்றாது. உண்மையில் அவர்கள் பக்தியில் அர்த்தமிருக்கிறதா? மாய வாழ்விலே பேச்சில் நிஜம் இருக்குமா என்றால் இல்லை. இவையெல்லாம் மக்களை மயக்கி. அவர்கள் உழைப்பிலே வாழ்வதற்காக நயவஞ்சர்களால் வகுக்கப்பட்ட சூழ்ச்சியான வழிகள். மக்கள் இதை நம்பி இந்த வழியிலே போய்த் தடுமாறுகிறார்கள். |
புரட்சி மனப்பான்மையைத் தீய்த்தவை
|
விழுப்புரம் ஜங்ஷனிலிருந்து கொண்டு பாண்டிக்குப் போகிறவன் வழி பார்ப்பது போலவும்; திருச்சி ஜங்ஷனிலுள்ளவன் மதராசுக்குப் போவதற்கு விளிப்பது போலவும், மக்கள் பிறந்தவுடனே அண்ணாந்து மேலே பார்த்துக் கொண்டு, ‘அப்பா! இதைவிட்டு எப்போது அந்த லோகத்திற்கு வருவேன்?‘ என்று, இந்த லோகத்தை ஒரு ஜங்கஷனாக்கி விட்டார்கள். சமணர்கள் காலத்தில் நிலையாமைத் தத்துவம் கொஞ்சம் வளர ஆரம்பித்தது. மணிமேகலையில் ஓர் இடத்தில் யாக்கை நிலையாமை பற்றி ஆசிரியர், சுதமதியின் வாயின் மூலம் கூறியிருக்கிறார். சுதமதி. மணிமேகலையின் தோழி. மலர்வனத்திலே மணிமேகலையைக் கண்ட அரசகுமாரன் (உதய குமாரன்) மானே! மயிலே! மரகதமே! என்று கூறுகின்றான். கூறிக் கொண்டே அருகில் வருகிறான். அப்போது சுதமதி கூறுகிறாள். |
"வினையில் வந்தது; வினைக்கு விளைவாரவது புனைவன நீங்கிற் புலால்புறத் பறந்திடுவது; முப்புவிளி வுடையது; தீப்பிணி யிருக்கை; பற்றின் பற்றிடங் குற்றக் கொள்கலம் - மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து," (மணிமேகலை) |
"மானே என்கிறீரே. அங்கே என்ன இருக்கின்றது? தோல், தோலைப் பிய்த்தால் இரத்தம், சீழ்; இவற்றிலா காமரசம் பருகலாமென்று வந்தீர்?" என்று யாக்கை நிலையாமையைப் பற்றிக் கூறுகிறாள். காமவேகத்தை அடக்குவதற்காகச் சுதமதி அரசகுமாரனிடம் யாக்கை நிலையாமையைப் |