பக்கம் எண் :

ஏ, தாழ்ந்த தமிழகமே!59

ஆதரிக்க  ஒரு  பத்து பேர் இருக்கிறார்கள் என்ற துணிச்சலால் சிலர்
சிந்தனையின்றி நிந்திக்கலாம். ஆனால், அவர்களெல்லாரும் வருங்கால
மக்களின் கண்டனத்துக்குரியவர்கள்.
 

ஏன் சொல்லுகிறேன்?
 

மீனாட்சி     சுந்தரனார்களும், சிதம்பரநாதர்களும், புத்தம் புதுக்
கவிதைகளை,   காவியங்களை  இயற்றித்தரத்தானே  இருக்கிறார்கள்?
சேரன்  செங்குட்டுவனின்  வீரத்தைப்  பற்றி ஒரு பாட்டுப் பாடுங்கள்
என்று   மீனாட்சி   சுந்தரனைக்  கேளுங்கள்;  ‘ஏன்  வீரம்  சேரன்
செங்குட்டுவனில்தான்   இருக்கிறதா?   கம்பராமாயணத்திலே   வீரம்
செறிந்திருக்கிறதே?  என்பார்கள், நான் மீனாட்சி சுந்தரனாரைப் பற்றி
ஏதோ   தவறாகக்   கூறுகின்றேன்   என்று   நினைக்க   வேண்டா.
இராமனுடைய     வீரம்     தமிழனுடைய    வீரத்திற்க்கு    நல்ல
எடுத்துக்காட்டல்ல.    தமிழனுடைய   வீரத்திற்குத்   தக்க   சான்று
உள்ளதைப்  பாடுங்கள்  என்கிறோம். புதிய கவிதைகளைப் பாடுங்கள்
என்கிறோம்.  எங்கள் ஊனக் கண்ணுக்கு தெரியும் பொருளைப்-பற்றிப்
பாடுங்கள் என்கிறோம்.
 

சாதாரண       மக்களின்     சதையையும்,    பிய்க்கும்படியான
கவிதைகளையும் பாடுங்கள் என்கிறோம். தாயின்  தன்மை ததும்பும்படி
பாடுங்கள்   என்கிறோம்.  தேயிலைத்  தோட்டத்திலே  நமது  இளம்
பெண்கள்   படுகிற   கஷ்டத்தைப்   பற்றி  பாடுங்கள்  என்கிறோம்.
பாட்டாளி  கொடிய  பணக்காரனுக்கு அடிமை; பணக்காரன் பூசாரிக்கு
அடிமை;  பூசாரி  ஏட்டுக் கடிமை; ஏடு கலைக்கு அடிமை; கலை கலா
ரசிகர்களுக்கு   அடிமை;   கலாரசிகர்கள்   பழமைக்கடிமை   என்ற
அடிமைத்தனம்    அறுபடும்   மார்க்கத்தைப்   பற்றிப்   பாடுங்கள்
என்கிறோம்.
 

குட்டிப் பாரதிதாசன

நாமக்கல்     கவிஞரின்  மகனார்,  "தியாகி"யில்  தீட்டிய  ஒரு
கவிதையைப்  பார்த்தேன்.  நாமக்கல் கவிஞர் வீட்டிலே ஒரு குட்டிப்
பாரதிதாசன் வளர்கிறார், மணியடிக்கிறதாம், பள்ளிக்கூடம் விட்டு வீடு
வருகிறார். வழியிலே சாலைக்குப் பக்கத்தில்