பக்கம் எண் :

ஏ, தாழ்ந்த தமிழகமே!61

கன்னையா   கம்பெனி நாடகம் நடக்கிறது. ராஜபார்ட் வேஷத்தில்
உள்ளவனின்  ராகம்  ரசிக்கவில்லை. தொண்டை கட்டிய காரணத்தால்
உடனே  நாடகத்தைப்  பார்ப்பவர்கள்  ‘உள்ளே போ‘ என்று கூச்சல்
போடுகிறார்கள்;  போய்விடுகிறான்.   நாடகம்   முடிந்து   வெளியே
போகிறவர்கள்  என்ன  பேசிக் கொள்வார்கள்? ‘கன்னையா கம்பெனி
மோசம்‘  என்பார்கள்.  ராஜமாணிக்கம்  பிள்ளை  நாடகம் நடக்கிறது.
நடிகர்களின் திறமையாலோ  அல்லது விளக்குகளின் மினுமினுப்பாலோ
உட்கார்ந்   திருப்பவர்களின்  உள்ளத்தைக்  கொள்ளை  கொள்கிறது,
நாடகம்     முடிந்து      வெளியே     போகிறவர்கள்     என்ன
பேசிக்கொள்வார்கள்?  ராஜமாணிக்கம்   கம்பெனி  நன்றாயிருக்கிறது
என்பார்கள்.
 

எப்படித்      தொண்டை    கட்டிய   நடிகன்,   கம்பெனிக்குச்
சொந்தமானதால்    கன்னையா   கம்பெனி   பழிப்புக்கிடமாகிறதோ,
அதுபோல,  வருணாஸ்ரமக்  கொடுமைக்கு  ஜாதீயக்  கொடுமைக்குச்
சொந்தக்காரர்களாய் இருப்பவர்கள் பழிப்புக்கு இடமாகிறார்கள்.
 

ஜாதீயக்     கொடுமையின்  மேல்  எந்தச் சிலாசாசனம் பொறிக்
கப்பட்டிருக்கிறது?    யாருடைய   முத்திரை   மோதிரம்   போடப்
பட்டிருக்கிறது? யாருடைய முத்திரை மோதிரம் போடப் பட்டிருக்கிறது
என்று  பார்த்த  நேரத்தில்  ஒரு வகுப்பாரின்  முத்திரை  மோதிரம்
தெரிந்தது.  தெரிந்ததால்  தான்,  நாமும் நமது கவியும் ஆரியத்தைத்
தாக்குகிறோம், காரணத்தோடு.
 

பார்ப்பனர்கள்    எனது  ஆருயிர் நண்பர்கள்; எப்படியிருந்தால்?
பார்ப்பனர்கள்    மாத்திரம்   தங்களுடைய    குறையை    நீக்கிக்
கொள்வார்களானால்,  இந்தப் பாரில் பார்ப்பன தோழர்களைப்போலப்
பரம திருப்தியாளர்கள் யாரும் எனக்கு இருக்க முடியாது.
 

தள்ளவேண்டிய    சுயநலம் தன்னை நீக்கிக் கொள்ளக் கொஞ்சம்
தன்னலமற்ற தன்மை வேண்டும்; புதுமைக் கருத்து வேண்டும்; துணிவு
வேண்டும்; அஞ்சா நெஞ்சம் வேண்டும்.