மாணவர், அந்த ஐயர்களைப் பார்த்து, ‘வினை என்கிறார்களே, அதைப் பற்றி விதண்டாவாதக்காரர்கள் சில சமயங்களில் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள் என்றார். உடனே பண்டிதர்கள் கேட்பதற்குப் பதில் சொல்லாமல், "நீங்கள் கல்லூரியிலே படிக்கிறேன் என்கிறீ்ர்களே, சாப்பாடு எங்கேயோ? என்று மாணவரைக் கேட்டார்கள். மாணவர் அதற்கு பிராமணர்களுக்கெல்லாம் நம் ஹாஸ்டலிலே தனி இடம் உண்டு. அங்கேதான் சாப்பாடு என்றார். நெற்றியிலே இல்லாவிட்டாலும், உடனே மாணவன் பிராமணண் என்று தெரிந்து கொள்கிறார்கள். மாணவன் நெற்றியிலே நீறில்லை; கல்லூரியிலே படிக்கிறவர்; அதுவும் வேதாந்தம் படிப்பு படிக்கிறார்; இங்கிலீஷ்காரனும் பார்த்துப் புதுமாதிரி என்று கற்றுக் கொள்வான். அவ்வளவு அழகாகக் கிராப்பை வாரி விட்டிருக்கிறார். | அலங்காரமான உடைதான்; ஆனால் ஆபாசமான கருத்துக்கள் மாணவன் பிராமணன் என்று தெரிந்து கொண்ட பிறகுதான் 'சரி விவாதிக்கலாம்' என்கிறார்கள். | விவாதம் ஆரம்பமாயிற்று மாணவன் கேட்டான், "ஒருவன் கஷ்டப்படவும் இன்னொருவன் சுகப்படவும் காரணம் என்ன?" என்று. அதற்கு அவனவன் செய்த பாவபுண்ணியம் என்று பதில் அளித்துவிட்டு மாணவனை நோக்கி, "சரி தம்பீ? ஒருவன் 60-ம், இன்னொருவன் 40-ம், மற்றொருவன் 20-ம் மார்க்குகள் வாங்கக் காரணம் என்ன?" என்கிறார்கள். அவன் பண்டிதர்கள் மொழியிலேயே "அவாளவாள் படித்த படிப்புக்குத் தக்கவாறு" என்றான். பண்டிதர்கள் "இதைப்போலத்தான் சுகத்தையும் கஷ்டத்தையும் அவாளவாள் செய்த பாவ புண்ணியத்திற்குத் தக்கவாறு அடைகிறார்கள்" என்று எடுத்துக்காட்டினார்கள். அவர்கள் விவாதிக்கத் தர்க்க சாத்திரம் தேவையில்லை. வேதாந்தங்களே உதாரணம்; கதைகள் மூலம்தான் விளக்குவார்கள். 'சரி அதிருக்கட்டும்' என்று சற்று நேரம் கழித்து மாணவன், "இந்த ஜென்மத்தில் அனுபவிப்பது போனஜென்மத்தில் செய்த பாவம், போன ஜென்மத்தில் |
|
|
|