கஷ்டத்தை அனுபவிப்பதற்கு, அதற்கு முந்திய ஜென்மத்தில் செய்த பாவம்; என்று இப்படியே அதற்கு முன் ஜென்மம், அதற்கு முன் ஜென்மம் என்று போய்க் கொண்டேயிருந்தால் முதல் ஜென்மத்திலே செய்த பாவத்திலே கொண்டு போய்விடும். அந்த ஜென்மத்தில் பாவம் செய்ததற்கு யார் குற்றவாளி? படைக்கும்பொழுதே பாவத்தைச் செய்யாதபடி யல்லவா ஆண்டவன் படைத்திருக்க வேண்டும்? அது இல்லாமல், பாவம் செய்யும்படியே படைத்துவிட்டு, "பாவம் ஏன் செய்தாய்?" என்று கண்டிப்பது ஒரு குற்றம்; பாவம் செய்யாமல் படைக்காதது இன்னொரு குற்றம்; ஆகவே நாம் செய்கிற பாவத்திற்குக் குற்றவாளி பரமன்தான் என்று சொல்கிறீர்களா? ஜென்மம் என்பது உண்டா? | அப்படியிருந்தால் முதல் ஜென்மத்திற்கு முன் என்ன நடந்தது, என்று யாராவது கேட்டால் என்ன பதிலளிப்பது, என்றான். | பண்டிதர்கள் கொஞ்சம் முறைத்துப் பார்த்தார்கள். "ஜென்மம் என்று ஒன்று உண்டா என்று கூடவா கேட்கிறீர்கள்? நம்பிக்கையிலிருந்துதான் வாதமே எதுவும் தொடங்க வேண்டும். முதல் ஜென்மம் இருந்தது என்று தான் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு முந்திய விவரங்கள் சொன்னால் புரியாது. அதிருக்கட்டும். "இந்தப் பிரச்சனை யெல்லாம் யார் கிளப்பி விட்டது? ஈரோட்டு நாயக்கராகத்தான் இருக்கும். இவர்களெல்லாம் பெரியார்களாம். ஒரு கட்சியின் தலைவர்களாம்" என்று பேச ஆரம்பித்து, விவாதத்திலிருந்து தப்பித்துக் கொண்டார்கள். இது நான் காலையில் ரயிலில் கண்ட காட்சி. | இதுபோல் இன்னும் வருணாசிரமம் தாண்டவ மாடினால், அதை ஆதரித்துக் கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும் எழுதினால், இந்தச் சாதி மட்டம் அந்தச் சாதி உசத்தி என்று சாதி மட்டக்கோலை நாம் வைத்திருக்கும் வரையில், வேண்டுமென்றே ஒரு கட்சியையும், கட்சியின் தலைவரையும் துாற்றுகிற வரையில், இந்த நாடு நற்கதியடைய மார்க்கமில்லை. |
|
|
|