தனித் தனியாயிருந்தால் ஒடித்துவிடலாம் என்று சொல்லியும், பள்ளி மாணவர்களுக்கு ஒற்றுமையின் அவசியம் போதிக்கப்படுகிறது. ஒற்றுமை என்றால் எதற்கு ஒற்றுமை? நெருப்புக்கும் நீருக்குமா? மானுக்கும் புலிக்குமா? பினாயிலுக்கும் தண்ணீருக்கும் பேதமிருக்கும்; ஆனால் அதில் ஒற்றுமையைக் காணுதல் என்றால் முடியுமா? | வேற்றுமையில் ஒற்றுமை | இந்து முஸ்லிம் ஆகிய இருபெரும் சமுதாயங்கள் பல துறைகளிலே வேற்றுமையைக் கொண்டவை. அவற்றில் ஒற்றுமை என்றால் ஏற்படுமா? வேற்றுமையிலே ஒற்றுமை காட்டு, அது தர்க்கத்துக்குரியது. மாணவர்கள் கேள்வித்தாளுக்குரியது. நாட்டுக்குரியதா? நாட்டிலே நடவாது. அதை உத்தேசித்துத்தான் நமது புரட்சி கவிஞர், இன்று உலகம் பொதுவுடமை பேசுவதைக் கடுமையாகக் கண்டிக்கிறார்; இனம் கலந்தால் இடரறும் என்கிறார், சனாதன ஊற்றைத் தூர்க்க வேண்டும் என்கிறார். வருணாஸ்ரமத்தின் வாயிற்படியை அடை என்கிறார். வேதாந்தம் சித்தாந்தம் எல்லாம் வேலை ஒழிந்த நேரத்தில், ஆண்டிகள் விவாதிக்க வேண்டிய பொருள். கொலை வாளை எடு. முதலில் கொடியோர் செயலை அறவே ஒழிப்போம் என்றும், மகாராசர்கள் உலகாளுவதா என்றும் கேட்கிறார். | கொலை வாளினை எடு | அந்தக் காலத்திலே கஷ்டம் ஏற்பட்டால், 'இட்ட முடன் என் தலையில் இன்னவாறு என்றெழுதி விட்ட சிவனும் செத்து விட்டானோ. முட்டப் பஞ்சமே வந்தாலும் பாரமவனுக்கே' என்று பாரம் பழிகளை 'அவன்' மேல் சுமத்தினார்கள்; பதிலை எதிர்பார்க்காமல் இடைக்காலத்தில், 'கேட்டவரம் அளிக்கும் கீர்த்தியுள்ள தெய்வங்காள், கூட்டோடு எங்கே குடிபோனீர்' என்று கடவுளைப் புலவர்கள் தேட ஆரம்பித்தார்கள். ஆனால் பாரதிதாசனோ, "கடவுளைக் காண முடியவில்லை. ஆகையால் கடவுள் வந்து கடுங்கோலர்களைத் தண்டிப்பார் என்று நினைக்காதே; கொலை வாளினை எடடா; |
|
|
|