பக்கம் எண் :

நிலையும் நினைப்பும்7

வாய்க்கால்களைத்         தாண்டியிருப்பார்கள்;        ஆறுகளை
நீந்தியிருப்பார்கள்;  ஆரண்யங்களைக்  கடந்திருப்பார்கள்; அவர்கள்
தோள்  வீங்கியிருக்கும்; கண்கள் சிவந்திருக்கும்; வேல் எறிந்திருப்பர்;
அது  எதிரியின்  விலாவில் பாய்ந்திருக்கும்; வெற்றி கிடைத்திருக்கும்.
பரணி  பாடியிருப்பர்!  இப்படித்தான் தமிழகத்தில் போர் நடந்ததாகப்
பழம்பெரும்  காப்பியங்களில்  காணமுடியுமே  தவிர வேறு விதமாகக்
காணமுடியாது.
 

தமிழ்   மன்னன் போர் என்று அறிவித்ததும் போர்ப் பிரதானியர்
புடைசூழ  முன்  குரு  வந்தார்;  கொலுமண்டபத்திலுள்ள மந்திரிகள்,
மக்கள்      அனைவரும்     எழுந்து     நின்றனர்.     மன்னன்
சிம்மாசனத்திலிருந்து   இறங்கி  ஓடிவந்து  குருவை  வரவேற்று  ஓர்
ஆசனத்தில்   அமரவைத்தான். குரு அனைவரையும் ஆசிர்வதித்தார்.
பிறகு குரு பேசுகிறார்.
 

குரு:- ராஜன்! போருக்குக் கிளம்புவதாகக் கேள்விப்பட்டேன்!
 

அரசன்:-   ஆம்!   குருதேவா!   அதற்குத்   தங்கள்  அனுக்கிரகம்
வேண்டும்.
 

குரு:-   ராஜன்!   அப்படியானால்   எந்தப்   பக்கம்  படையெடுக்க
உத்தேசம்?
 

"உத்தேசமென்ன,     ஸ்வாமி, தங்கள் உபதேசம் மிதிலாபுரி மீது"
என்று   மன்னன்   கூறினான்.

உடனே     குரு,   "யோசித்துச்    செய்.  வடகிழக்கில்   வால்
நட்சத்திரம்    தோன்றியிருக்கிறது.       மன்னனுக்கு      ஆகாது
என்பார்கள்,      மேலும்   இம்மாதம்   நவக்கிரகங்கள்  சரியில்லை;
திசை மாறியிருக்கின்றன. ஆகையால் போர் தொடங்குமுன், ஓர் யாகம்
நடத்தவேண்டும்.   அந்த   வேள்வி  வெற்றிகரமாக  முடிந்தால்தான்
உனக்குப்   போரில்  வெற்றி  கிட்டும்"  என்று  கூறினார்.  மன்னன்
அதற்குவேண்டிய ஏற்பாடுகளைச் செய்தான். யாகம் நடந்தது. நெய்யை
அக்கினியிலிட்டு வேதம் ஓதினர். ஒமப்புகை கிளம்பியது. ஆடு, கோழி
அறுக்கப்பட்டன. பிறகுதான் நம் மூதாதையர்களுக்குப் போரில் வெற்றி
கிட்டியது என்பதாக