எங்காவது பாடல்களைக் காட்ட முடியுமா? அத்தகைய, காட்ட முடியாத நிலை தமிழகத்தில் எத்தகைய நினைப்பைத் தந்திருக்கும். இயற்கையாகவே நல்ல உயர்ந்த நினைப்புகளைத் தந்தது. இடைக்காலத்தில் வந்து புகுந்த யாகம், யோகம், மாகாளி, திரிசூலம், ஜெபமாலை, கமண்டலம் ஆகியவைகள் தாழ்ந்த நினைப்பைத் தந்தன. தமிழர் நிலை தாழ்ந்தது; அயல் நாட்டார் நமது நினைப்பைக் கேட்டு, கேலி செய்கிற அளவுக்குத் தாழ்ந்தது. |
நண்பர், தலைவர் மதியழகன் நான் வருங்காலத்தில் தமிழ்நாட்டின் தூதுவனாக மேல் நாட்டுக்குச் செல்ல வேண்டுமென்று கூறினாரே, நான் வேண்டாம்; வேறு யாராவது ஒருவர் மேல் நாடு செல்லுகிறார் என்று வைத்துக் கொள்வோம், சென்றவரைப் பார்த்து மேல்நாட்டொருவர், "ஆம்! தோழரே!! உமது நாட்டில் பேசப்பட்டுவரும் வாயுவாஸ்திரம் எவ்வளவு வல்லமை வாய்ந்தது, அதை எப்படிச் செய்வது, பிரயோகிப்பது?" என்று கேட்டால் நமது தமிழகத்தின் தூதர் என்ன பதில் சொல்லுவார். ஆனால் அவரே அகநானூறு, புறநானூறு காலத் தமிழ்நாட்டின் தூதுவராக ஜினிவாவோ அல்லது அமெரிக்காவோ சென்றிருந்தால் எப்படி அவரது நிலை இருந்திருக்கும்? அது எத்தகைய நினைப்பைத் தந்திருக்கும்? வாயுவாஸ்திரத்தைப் பற்றிய சர்ச்சை இருக்காது. எனவே "எப்படிப் பதில் கூறுவது?" என்று இன்றைய தமிழ்நாட்டின் தூதுவருக்குத் தோன்றிய பிரச்சனையும் தோன்றியிருக்காது. பெருமிதத்துடன் தமிழ்நாட்டின் வேல் வில்லின் சிறப்பைப் பற்றியும், வீரத்தைப் பற்றியும், போர் முறையைப்பற்றியும் பேசும் நிலை ஏற்பட்டிருக்குமே! ஏன் இப்பொழுது அந்நிலை இல்லை; அந்த நிலை எப்படி மாறியது? சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழனுடைய கலாசாரம், பழக்கவழக்கம், பண்பு, நாகரிகம் யாவும் சங்க காலத்திற்கும் இக்காலத்திற்கும் மாறுபட்டிருக்கக் காரணம் என்ன? ஆரியர் - திராவிடர் பிரச்சனையை மறந்தே யோசித்துப் பாருங்கள். என்ன பதில்? இன்று ஆரியரும், திராவிடரும் இரண்டறக் கலந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அப்படிக் கலந்துவிட்டதாகவே |