முதலியார் குலங்கள்- | (1) | வேளாண் முதலியார் மூவேந்தர் காலத்திற் படை முதலியாராய் (படைத்தலைவராய்) இருந்தவரின் வழியினர். | | (2) | செங்குந்த முதலியார் அல்லது கைக்கோள முதலியார் (சோழர் படைமறவராகவும் படைத் தலைவராகவும் இருந்தவரின் வழியினர்). | | (3) | அகம்படிய முதலியார் (கொத்தவேலை செய்பவர்). | | | பட்டங்கள்-(1) இலங்கை யரசியலார் வழங்கும் சிறப்புப் பட்டம். | | (2) | தஞ்சை மாவட்டச் சமணருள் ஒரு சாரார்க்கு வழங்கும் பட்டம். |
வண்ணான் பெயர் விளக்கம் - ஆடைகளை வெளுத்துவண்ணமாக்கு பவன். பெயர்கள் - வண்ணான், வண்ணத்தான்,ஈரங்கொல்லி (ஏகாலி), காழியன். பிரிவு - இடம் பற்றியது. பாண்டியவண்ணான், சோழிய வண்ணான், கொங்க வண்ணான். நிலைமை பற்றியது: தீண்டுவான் xதீண்டாதான். வல்லம்பன் இடம் - தஞ்சை திருச்சிராப்பள்ளிமதுரை மாவட்டங்கள். தொழில் - பயிர்த்தொழில். தலைவன் பட்டம் - சேர்வைகாரன். குலப் பட்டம் - அம்பலகாரன். வலையன் பெயர் - வலையன், வலைகாரன், வேடன்,சிவியான், குருவிக்காரன் தொழில் - வலை வைத்துப் பறவை விலங்குபிடித்தல், ஆறு குளங்களில் மீன் பிடித்தல். பிரிவு - பல அகமணப் பிரிவுகள். தலைவன் பட்டம் - அம்பலகாரன்,கம்பளியன். குலப் பட்டம் - மூப்பன், சேர்வை,அம்பலகாரன், வன்னியன்.
|