கரு - கார்.
மேகம் சூல் கொள்ளும்போது கருத்திருத்தலின் மக்களின் சூலும் கரு, கருப்பம் எனப்படும்.
மேகம் கருத்து
மழைபொழிவது உலக வினைகட்கெல்லாம் காரணமா யிருத்தலின் கரு என்பது காரணத்தையும்
குறிக்கும்.
'வானின்
றுலகம் வழங்கி வருதலான்" (குறள். 11)
என்றார்
திருவள்ளுவரும்.
கரணம், கருவி
என்பன கரு என்னும் ஒருவினைத் தொழிற் பெயர்கள். திரிகரணம் = முக்கருவி. அந்தக்கரணம் -
உட்கருவி. கரணம் அணம் விகுதி. கருவி - வி விகுதி. கரணத்தின் நீட்டம் காரணம். கருவி
மேகத்தின் தொகுதியையும் உணர்த்தும்; எ-டு: 'கருவி மாமழை,' 'கருவி தொகுதி' -
தொல்காப்பியம். கரு - கார். கார் + அணம் = காரணம். கார் + இயம் = காரியம், இயம்
தொழிற்பெயர் விகுதி.
அகாலம்.
அ + காலம்.
காலம்:
கால்+அம்=காலம். அம் சாரியை. கால் உடம்பின் காற்பாகமாகிய உறுப்பு.
கால் =