சலம் என்பது
தென்னாட்டில் நீர்ப்பொருள்களில் ஒன்றாகிய சீழுக்கு வழங்கி வருகின்றது.
சலம் என்னும்
தென்சொல்லையே ஜலம் எனத் திரித்தனர் ஆரியரும் தமிழரும்.
'ஜெட்டியார் கடைக்கு
ஜென்று ஜேலம் ஜீனி வாங்கி வா' என்று இன்றைக்கும் தமிழ்மக்கள் தென்சொற்களை
வடசொற்போலத் திரித்து வழங்குதல் காண்க. சலிப்பு என்பது களைப்பு என்று பொருள்பட்டாற்
போல, அதன் பரியாயச் சொல்லாகிய அசைவு என்பதும் களைப்பு என்று பொருள்படும்.
"இளிவே இழவே
அசைவே வறுமையென
விளிவில் கொள்கை
அழுகை நான்கே" (தொல். 1199)
சலித்தல்-அசைத்து
மாத்தெள்ளுதலையுங் குறிக்கும். சலிக்கும்
கருவி-சலிப்பான்,
சல்லடை எனப்படும். சலி+அடை=சல்லடை.
அஞ்சலி.
அஞ்சல்-அஞ்சலி.
அஞ்சலி = வணக்கம்,
அஞ்சிச் செய்வது.
அதிகம்.
அதி-அதை என்னும் சொல்லின் திரிபு.
அதைத்தல் =
வீங்குதல், பருத்தல், மிகுதல்.
அதி+இகம் = அதிகம்,
தொழிற்பெயர்.
அதி என்பது
மிகுதிப்பொருள் உபசர்க்கமாய் வரும்.
அதிமதுரம். அதி
+ மதுரம் = அதிமதுரம், ஒரு சரக்கு.
மதுரம் = கள், தேன்,
மதர்ப்புச் செய்வது.
மதமத என்பது
எரிப்புப்பற்றிய குறிப்புச்சொல்.
மத-மதர்-மதுர்-மதுரம்-மது,
அதிவேகம். அதி
+ வேகம்.
வேகம் = வேகு + அம்.
= வேதல், சூடு, எரிதல்.
ஒரு பொருள்
வேகும்போது விரைவாய் எரிதலின் விரைவு வேகம் எனப்படும். சுறுசுறுப்பைச் சூட்டிக்கை யென்பர்.
ஒருவினை மும்முரமாய் நடந்தால் 'நெருப்பெழுந்து வேகிறதே!' என்பர் தென்னாட்டார்.
அநுசிதம். அந் +
உசிதம்.
அந்-அல் என்பதன்
திரிபு
உசிதம் = உயர்வு,
சிறப்பு, உகரச் சுட்டடியாகப் பிறந்தது.
உயர்வுபற்றிய
சொற்களெல்லாம் பெரும்பாலும் உகரச்
சுட்டடியாகவே
பிறக்கும்.
எ-டு: உயர்வு,
உம்பர், உன்னதம், உச்சி, உச்சிதம்.