உத
உத் (உபசர்க்கம்),
உத்துங்கன்.
அநுதாபம்.
அநு+தாபம். அநு-உபசர்க்கம்.
அநு, அண்ணு என்பதன்
திரிபு.
அண்ணுதல் =
கிட்டுதல், கூடுதல்
தவி + அம் =
தாவம்-தாபம்
தவித்தல்-நீர்வேட்டல், வருந்தல், விரும்புதல், இரங்குதல்.
அநுதாபம் = இரக்கம்,
அநு = உடன், கூட, துணையான.
அநுமதி. அநு +
மதி.
மதி = அறிவு
மதித்தல் =
அளத்தல், அளந்தறிதல், நிதானித்தல், பெரிதாய் எண்ணுதல்.
அநுமானம்.
அநு-மானம்
மானி + அம் =
மானம், தொழிற்பெயர்
மானித்தல் =
அளத்தல், மதித்தல்
மானம்-அளவு
படியை மானம் என்பது
வடார்க்காட்டு வழக்கு
மானம்- Moon,
காலத்தை அளப்பது
cf.
மதி-மாதம்.
அவமானம் =
மதிப்பின்மை
உபமானம் = துணை,
அளவு, ஒத்த
சன்மானம் = நல்ல
மதிப்பு, மதித்தளிக்கும் பரிசு
அபிமானம் = மிக
மதித்தல்
பெறுமானம் = பெறும்
அளவு, மதிப்பு
வருமானம் = வரும்
அளவு, வருவாய்
கட்டுமானம் = கட்டும்
அளவு, கட்டடம்+மானம் விகுதி
உபமானத்தா
லறியப்படுவது உபமேயம்.
மானம் = அளவு,
விதம். மானம்- manner
மானம் மானை என்று
உலகவழக்கில் திரியும்.
'இந்த மானைக்குப்
போட்டேன் என்றால் என்னவாயிருக்கும்?'
என்பது ஓர் உலகவழக்கு
(தென்னாடு).
மானி = அளப்பது,
அளப்பவன், மதிப்பது, மதிப்பவன்
உஷ்ணமானி =
வெப்பத்தை அளப்பது
வாயுமானி = காற்றை
அளப்பது
|