நாவலர் சோமசுந்தர பாரதியாரின் நற்றமிழ்த் தொண்டு
பாரதியென்று பெயர் கொண்ட முத்தமிழ்ப் புலவருள், தமிழ்க்
காப்புப் பற்றி முதன்மை பெற்றவர் பசுமலை நாவலர்
ச. சோ. பாரதியார் ஆவார்.
எம்மொழிப்
புலமைக்கும் இலக்கண அறிவு இன்றியமையாதது. அதிலும்
தமிழ்ப் புலமைக்கு அது தனிப்பட வேண்டுவது.
சிலர் இலக்கணக் கல்வியின்றியே சிறந்த மேடைப்
பேச்சாளராயி ருக்கலாம். அதுபற்றி அவர் புலவர் வரிசையில்
வைத்தெண்ணப்படார்.
புலவரும் துறைபற்றிப் பலவகையர்; ஒவ்வொரு துறையிலும்
தலையிடை
கடையென முத்திறத்தர். ஒரு புலவரின் புலத்திறத்தை
அவர் துறைப்புலமை மிக்காரே அளந்தறிதலொண்ணும்.
புலமிக்
கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புன லூர பொதுமக்கட்
காகாதே
பாம்பறியும்
பாம்பின கால் (பழ.
7)
என்றார்
முன்றுறையரையனார்.
நாவலர் பாரதியார் ஆங்கிலப் பொதுக் கல்வியில் முதுபட்டமும்
சட்டக் கல்வியில் இளம்பட்டமும் பெற்றபின், தமிழிலக்கண
விலக்கியம் திறம்படக் கற்று, தொல்காப்பியப்
பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல்
என்னும் மூவியற்குப் புத்துரையும் வரைந்து வெளியிட்டார்.
அகத்திணையியல் உரைப் பாயிரத்தில்,
தற்காலம் தமிழில் தலைசிறந்து நிலவுவது தொல்காப்பியர்ர்
நூலே. அது, ஆரியப் பாணினிக்கும் தூரிய மேல்புல யவன
அரித்தாட்டிலுக்கும் காலத்தால் முந்திய தொன்மையுடையது.
பாணினியின் செறிவும், பதஞ்சலியின் திட்பமும்,
அரித்தாட்டிலின் தெளிவும், அவையனைத்திலு மில்லா
வளமும் வனப்பும், அளவை நூன்முறையமைப்பும் பெற்றுச்
செறிவும் தெளிவும் நெறியா நெகிழவும் நிரம்பியமைந்தது" என்று கூறியிருப்பது நாவலரின் தமிழ்ப் புலமையையும் பற்றையும் ஒருங்கே
காட்டும்.
|