இங்ஙனம், அறிவுத் துறையில் மறைமலையடிகட்கு
அடுத்தபடி யாகவும், போராட்டத் துறையில்
ஈடிணையற்ற கருணாகரத் தொண்டை மான் போலும்
படைத்தலைவராகவும், தமிழ்க்காப்புத் தொண்டாற்றி,
எதிரதாக்
காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய், (குறள்.
429)
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது", (குறள்.
647)
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி(குறள்.
1029)
முதலிய
குறள்களை விளக்கும் வகையில் வாழ்ந்த நாவலர்
பாரதியார், தமிழர் என்றும் மறவாது போற்றற்குரியார்.
ஆங்கிலக் கல்வியும், சட்டநூலறிவும், ஏரண முறையில்
எதிரியை வெல்லும் தருக்க ஆற்றலை வளர்க்கும்
தன்னுரிமை வாழ்க்கைப் பணியான வழக்கறிஞர்
தொழிலும், இயற்கையாகப் பெற்ற அஞ்சா நெஞ்சமும்,
இந்தியெதிர்ப்புப் போரில் அவருக்குப் பெரிதும்
துணை செய்தன.
அவர் போன்று, அவையடக்கும் அரிமாத் தோற்றமும்,
சுவை மடுக்கும் வினைநல மாற்றமும்; அழகிய வசிய
முகமும், பழகிய வளமை யகமும்; கூரிய வங்கிமீசை
முறுக்கும், ஆரிய வன்கட் கூற்று நறுக்கும்;
விளங்குரை வெண்கலக் குரலும், விழுமிய பொருள்
விளக்குந் திறலும்; காமஞ் செப்பாது கண்டது
மொழியும் கட்டாண்மையும், ஏமமுஞ் சாமமும் இன்றமிழ்
காக்கும் பற்றாண்மையும்; பரந்த நோக்கும்,
பாங்கான போக் கும்; ஒருங்கேயுடைய வழக்கறிஞரேனும்
தமிழ்ப் பேராசிரியரேனும் பிற தொழிலாரேனும்
இன்று தமிழகத்திலும் இப் பாரில் வேறெப்பகுதி
யிலும் காணவியலுமோ?
நாவலர் பாரதியாரைப் பாராட்டுங் கூட்டத்திற்குப்
பெரும்புலவரும் இந்தி யெதிர்ப்பவருமான
ஒருவரே தலைமை தாங்கல் வேண்டும். அல்லாக்கால்
முதலமைச்சரும், அவருமன்றேல் ஒரு வள்ளலாரும்
தலைமை தாங்கலாம். முதலமைச்சர்ர் தலைமை தாங்கின்,
கூட்டம் பெருக்கும்; கொண்டாட்டஞ் சிறக்கும்;
கொள்ளும் முடிபுகள் நிறைவேற வழிவகை பிறக்கும்.
வள்ளலார் தலைமை தாங்கின், கொண்டாட்டச்
செலவு முழுவதையும் தாமே ஏற்றுக்கொள்வார்.
பாராட்டுக் கூட்ட அறிவிப்பு நாடு முழுதும்
தலைநகரிற் சிறந்தும் பரவுதல் வேண்டும்.
புலமையும் இந்தியெதிர்ப்பும் மிக்க புலவரை வரிசையறிந்து
பேச்சாளராகக் குறித்த அச்சிட்ட நிகழ்ச்சி
நிரலைத் தப்பாது கடைப்பிடித்தல் வேண்டும். |