பக்கம் எண் :

16பாவாணர் நோக்கில் பெருமக்கள

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் தவப்பெருஞ் சிறப்பியல்புகள்

நான் ஏறத்தாழ முப்பதாண்டுகட்கு முன், தவத்திரு குன்றக்குடி அடிகளைத் திருநெல்வேலித் (வீரராகவபுரம்) திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில், தாமரைத்திரு வ. சுப்பையாப் பிள்ளையுடன் சென்று கண்டேன். அடிகளின் தோற்றமும் உரையும் அவர்கள் துறவு நிலைக்கேற்ப ஏற்றமாயிருந்தன. அன்றிருந்து அவர்களது தொடர்பு.

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார்ர் நட்பு
(குறள். 782)

பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலுந் தேயுமே
தானே சிறியார் தொடர்பு
(நாலடி. 125)

நளிகடற் றண்சேர்ப்ப நாணிழற் போல
விளியுஞ் சிறியவர் கேண்மை - விளிவின்றி
அல்கு நிழல்போ லகன்றகன் றோடுமே
தொல்புக ழாளர் தொடர்பு(நாலடி. 166)

கனைகடற் றண்சேர்ப்ப கற்றறிந்தார் கேண்மை
நுனியிற் கரும்புதின் றற்றே - நுனிநீக்கித்
தூரிற்றின் றன்ன தகைத்தரோ பண்பிலா
ஈர மிலாளர் தொடர்பு
(நாலடி. 138)

என்னுஞ் செய்யுட்கிணங்கத் தொடர்ந்து வளர்ந்தோங்கி வருகிறது.

நான் இதுகாறும் அவர்களிடங் கண்ட சிறப்பியல்புகளாவன :

செம்பொருட் காட்சி

எப்பொருள் எத்தன்மைத்தாயினும் யார்யார்வாய்க் கேட்பினும், அப் பொருளின் மெய்ப்பொருள் காண்பதே அடிகள் இயல்பு.

வேத ஆரியர் இந்தியாவிற்குட் கால் வைக்குமுன்னரே, தென் பெருங் கடலில் மூழ்கிய குமரிநாட்டில் தோன்றி முழு வளர்ச்சியடைந் திருந்த தூய