சமற்கிருதப் புலமை
ஆங்கிலத்தினும்
மிக மிகக் கடினமானது சமற்கிருதம். எழுத்துப் பெருக்கம்
(51), ஒலிக்கடுமை, மூவெண், இலக்கணப்பால், பிரியா வேற்
றுமையுருபு, புணர்ச்சி நெறிகளின் பல்வேறு விலக்கு, பெயர்களின்
வேற்றுமைப்பாடும் (Declension
of Nouns)
வினைகளின் புடை பெயர்ச்சியும் (Conjugation
of verbs)
பல்வேறு
முறைப்படல், பேச்சு வழக்கின்மை, பன்மொழிச்
சொற்கலப்பு, வேர் தெரியாச் சொற் சிதைவு முதலியன
பொதுவாக மொழி வெறியரும்
கடுவுழைப்பாராய்ச்சியாளரு மன்றிப் பிறர் கற்க
முடியாவாறு சமற்கிருதத்தைக் கடினமாக்குங் கூறுகளாம்.
ஆயினும் அடிகள் அம் மொழியையும் அதன் இலக்கியத்
தையும் அமைவுறக் கற்றுத் தேர்ந்தது வியக்கத்தக்கதே.
அடிகளின் சமற்கிருதப் புலமை, காளிதாசனின் சாகுந்தல
நாடகத் தெள்ளிய தமிழ் மொழிபெயர்ப்பு நூலாலும்;
ஆரிய வேதநூற் கல்வி, சிவநெறி தமிழரதே என்று நிலைநாட்டும்
வண்ணம் தம் மதம்பற்றிய நூல்களிலெல்லாம் வேதபிரமாண
உபநிடத இதிகாசப் புராணங்களி னின்று எடுத்துக்காட்டும்
சான்றுகளாலும், "தென்புலத்தார் யார்?" என்பது
போன்ற ஆராய்ச்சிக் கட்டுரைகளாலும், தெற்றெனத்
தெரியலாகும். இதுகாறும் எவரும் அவற்றைப்பற்றிக்
குறைகூறாமையும் இதனை உறுதிப்படுத்தும்.
பொதுநலத் தொண்டு
பொதுமக்களாயினும் புலமக்களாயினும்,
மக்கள் மனப்பான்மை இருவேறு
வகைப்பட்டதாகும். அவற்றுள், ஒன்று பெரும்
பொருளீட்டித் தம் குடும்பத்தையே பேணுவதையும், இன்னொன்று
தெளிந்த அறிவு பெற்றுப் பொதுநலத் தொண்டே சிறப்பாக
ஆற்றுவதையும், குறிக் கோளாகக் கொண்டனவாகும்.
இதனையே,
"இருவே
றுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய
ராதலும் வேறு" (குறள்.
374)
என்றார்
திருவள்ளுவர்.
தமிழர்
தம் முன்னோர் நிலையினின்று இறப்ப இழிந்து,
அறிவிலி
களாய் அடிமைத்தனத்தில் உழல்வதைக் கண்டு பொறுக்கமாட்டாது,
அவரைக் கரையேற்றுவதற்கே அடிகள் வருந்திக் கற்று
மும்மொழிப் புலமையும் செம்மையிற் பெற்றார். அவர்க்கு
வேண்டிய படைக்கலம் பரந்த கல்வியறிவே. "ஆற்றவும்
கற்றார் அறிவுடையார் என்றார் முன்றுறையரையனார்.
இக்கால
வுயர்கல்வி அறிவியலும் (Science)கம்மியமுமே
(Technology)
யாதலாலும், அதனைப் பெறும் வாயில் ஆங்கிலமே யாதலாலும்,
அதிற் புலமை பெறுவது இன்றியமையாத தாயிற்று. அஃதின்றி,
தொலை |