துரைமாணிக்கத்தின் உரைமாணிக்கம்
தமிழ் இற்றைக்கு ஐம்பதினாயிரம் ஆண்டுகட்கு
முந்தித் தோன்றிய உலக முதற்றாய் மொழியாதலாலும்,
அது தோன்றிய குமரிக் கண்டம் பல்லாயிரம்
ஆண்டுகட்கு முன்பே இந்துமாவாரியில் மூழ்கிப்
போனமையாலும், அக் கண்டத்தில் வழங்கிய முதலிரு
கழக நூல்களும் ஆரியர் வந்தபின் அழிக்கப்பட்டொழிந்தமையாலும்,
இற்றைத் தமிழ் நூல்களுள் முந்தியனவான தொல்காப்பியம்
என்னும் இலக்கண நூலை யும் திருக்குறள் என்னும்
இலக்கிய நூலையும், வரலாறு, மொழிநூல், மாந்தனூல்
(Anthropology)
ஆகிய முந்நூலறிவுடையாரே செவ்வையாய் ஆய்ந்துணர
முடியும். இற்றைத் தமிழ்ப் புலவர் சிலர் பண்டாரகர்
(Dr.)
என்னும் ஆங்கிலப் பட்டம் பெற்ற அளவிலேயே,
தம்மை முற்றறிஞராக இறைவனோடொப்பக் கருதி
இறப்ப மதித்து, அப் பட்டம் பெறாதாரை யெல்லாந்
தம்மினுந் தாழ்ந்தவராக எண்ணத் தலைப்பட்டு
விடுகின்றனர்.
தமிழ்நாட்டு அரசியலிலும் பல்கலைக்கழகங்களிலும்
இன்று, ஆரியம் வேரூன்றித் தமிழைத் தாழ்த்தியிருப்பதால்,
மதிநுட்பம், பரந்த கல்வி என்னும் இரண்டொடு
நடுநிலை, அஞ்சாமை, தன்னலமின்மை, மெய்யறிஅவா
ஆகிய பண்புகளை உடையார் உண்மையான ஆராய்ச்சி
நூல்களை இடுநூலாக (Thesis)
விடுத்து ஆராய்ச்சிப் பட்டம் பெறக்கூடிய சூழ்நிலையில்லை.
அதனாலேயே, தமிழின் தொன்மை முன்மை தாய்மை
தலைமையாகிய பெருமைகளை எடுத்து விளக்கும் நூல்க
ளையே இடு நூலாக விடுத்து, ஆராய்ச்சிப்பட்டம்
பெறவேண்டு மென்னுங் குறிக்கோள் கொண்ட என்போன்றார்,
அப் பட்டம் பெறாதி ருக்கின்றனர். இன்று பெறப்படும்
பண்டாரகர்ப் பட்ட இடுநூல், ஆரியத்தை யுயர்த்திக்
கூறுவதாகவோ அதை முற்றுந் தழுவாததாகவோ இருக்கவேண்டி
யிருப்பதால், இற்றைப் பண்டாரகர்ப் பட்டம்
அதைப் பெற்றவர் சில நூற்பாக்களையோ செய்யுள்களையோ
பிற செய்திக ளையோ ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க
அல்லது எழுத முடியும் என்னும் ஆற்றலையே
பெரும்பாலுங் காட்டுவதாகும்.
மேலும், அரசியலிலும் பல்கலைக்கழகங்களிலும்
அவற்றைச் சார்ந்த கல்லூரிகளிலும் பெரும்பதவி
தாங்குவோரும், கட்சிச் சார்பான புலவரும் |