பக்கம் எண் :

11

3

தமிழ் மொழியின் கலைச் சொல்லாக்கம்

பேராசிரியர்களே! பெருமக்களே! அருமைத் தமிழாசிரியர்களே!

இம் மாநாடு இரண்டு நோக்குள்ளது. ஒன்று தமிழ் முன்னேற்றம்; இன்னொன்று தமிழ்ப்புலவர் முன்னேற்றத்தைக் கருதியது. நான் ஏற்றுக் கொண்டது ஒன்றுதான்; வடமொழி தென்மொழிப் போராட்டம். இது குறைந்த பக்கம் கடந்த 2,000 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதிலே நக்கீரர், பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள் இவர்களை வழித் துணை வர்களாகக் கருதிக் கொள்ளுகின்றேன். போராட்டமானது வெற்றியாகத் தான் முடியு மென்கிற நம்பிக்கை எனக்குள்ளது. ஏனென்றால் இதனாலே மிகுந்த இடர்ப்பாடு விளையும், எனக்குமட்டுமல்ல; பிற தமிழாசிரியருக் குங்கூட எத்தனையோ பள்ளிகளிலே தமிழாசிரியர் ஏதேனும் சிறிது தமிழ்ப்பற்று காட்டுகிறார் என்றால், மாணவரிடத்திலே சிறிது தமிழ்ப் பற்று ஊட்டுகிறார் என்றால், உடனே அங்கே இருக்கிற தலைமையா சிரியர்கள் அவர்களுக்கு ஏதேனும் ஊறு செய்யத் தொடங்கிவிடுகின்றார் கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். ஒன்று ஊரைவிட்டு மாற்றி விடுவது அல்லது வேலையை விட்டு நீக்கி விடுவது. தமிழ்த் திருநா ளென்றோ, திருவள்ளுவர் திருநா ளென்றோ ஏதேனும் ஏற்பாடு செய்தால் எவ்வளவு முட்டுக்கட்டை இட வேண்டுமோ, அவ்வளவு முட்டுக்கட்டை இடுவது, இடங்கூடக் கொடுப்பது இல்லை என்று கேள்விப்படுகிறேன். ஒரு வீட்டிலே நடத்த வேண்டுமென்று இடம் கேட்டால்கூட அந்த வீட்டுக்காரரிடம் போய் "இடங் கொடுக்கா தீர்கள்," என்று சொல்வதாகக் கேள்விப்படுகின்றேன். அதோடுகூட மேலே இருக்கிற அதிகாரிகளுக்கும் கூடத் தமிழ்ச் சார்பு-தமிழ்ப் பற்று இருப்பதாகத் தெரியவில்லை. அத னாலேதான் என்னைப் பற்றியும் சிலர் தவறாகக் கருதிக் கொண்டி ருக்கின்றனர். தமிழைத் தூய்மையாகக் காக்க வேண்டுமென்பது தான் என் குறிக்கோள். அதுவும் அது வளம் பட்டது, தூய்மையானது என்பதனாலேதான்.

தமிழை நோக்கும்போது முதலாவது அதன் உண்மை நிலையைக் காணல் வேண்டும். தமிழிலே கலைச் சொல்லாக்கம் என்று சொன்னால் அந்தக் கலைச் சொல்லை ஆக்குவதற்குக் காரணமாக அடிப்படையான சில உண்மைகளை நாம் தெரிந்து கொள்ளல் வேண்டும். பிற மொழி யெல்லாம்