பக்கம் எண் :

பாவாணர் சொற்பொழிவு47

7000 இந்தியர் இன்று இங்கிலாந்தில் வாழ்கின்றனர். என் மாணவரும் அமெரிக்காவில் உள்ளனர்.

பழக்கம் வீணைப் பயிற்சிக்குத் தேவையானதுபோல் மொழிக்கும் தேவை. ஏனெனில் மொழியே ஒரு கலையாகும். அதனாற்றான் செந் தமிழும் நாப்பழக்கம் என்று கூறினர். டெமாசுதனிசு என்னும் கிரேக்க நாட்டுப் பெரும் பேச்சாளன் தொடக்கக்காலத்தில் குழறுவாயனாக விருந்தவனே.

தெலுங்கானா நிலைமை நம்முடையதை ஒத்ததன்று.

ஆரியம் இருந்தால்தான் தெலுங்கு வாழும்;

ஆரியம் ஒழிந்தால்தான் தமிழ் வாழும்.

அங்கு ஆண், பெண் அனைவரும் போராடுகின்றனர். இங்குத் தமிழர்களே எதிர்ப்பாளர்களாகத் தோன்றுவார்கள். உள்நாட்டுப் போருக்கு (Civil War) நாம் அணியமாக வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் பிரிய வாய்ப்பிருந்தது. அண்ணாத்துரையும் பெரியாரும் அகலக்கால் வைத்தனர். அப்போதே தமிழ்நாட்டுக்காகப் போராடும்படி கண்ணதாசன் நடத்திய "தென்றலில்" எழுதினேன். விடுதலைப் படையை விட்டுவிடுங்கள்.

குருதிக் கையொப்பமும் செம்மைக் கையொப்பமும் ஒன்றே!

திருநெல்வேலியில் "சூழ்ச்சியம்" என்னும் சொல் வழக்கில் உள்ளது. "Engine" என்னும் ஆங்கிலச்சொல்லிற்குச் சூழ்ச்சியம் என்பதே சரியான தமிழ்ச்சொல். "பொறி" என்பது "machine" ஐக் குறிக்கும், தட்டச்சுப் பொறி என்பது போல. எனவே "Engineering College" என்பதைச் "சூழ்ச்சிய வினைக் கல்லூரி" என்றும் "Mechanical" என்பதைப் "பொறி வினை" என்றும் வழங்க வேண்டும்.

அச்சூழ்ச்சிய வினைக் கல்லூரியில் சமற்கிருத வகுப்புக்களை நடத்த ஏற்பாடு செய்த முத்தையனை (இயக்குநர்) "மாட்லாடு" என்னும் சொற்கு மூலம் கேட்டேன். அவர் அமைதியாயிருந்தார். இழந்த ஆற் றலைப் பெறவேண்டும். மொழியியல் தொடர்பான பயிற்சி நமக்கு மிகவும் தேவை. போராட்டக் காலத்தில் பட்டிமன்றங்கள் நடைபெறும். புண்படாத போர் நிகழும்.

கிளைகள் தொகையைப் பொருளாளர்க்கு அனுப்பிவிடுங்கள். நமக்கு நல்ல பொருளாளர் கிடைத்துள்ளார். சிலை (திசம்பர்)த் திங்கள் 20, 21 ஆகிய இருநாளிலும் கழக முதலாட்டை நிறைவு விழா வும்,திருவள்ளுவர் ஈராயிரமாண்டை நிறைவு விழாவும் நடைபெறும். "திருக்குறள் தமிழ் மரபுரை" அப்போது வெளியிடப் பெறும். கிளைகள் அல்லது மாவட்டம் ஒவ்வொன்றும் 200 உருபா தண்டி விடுக்க வேண்டும்.

(திரு. சாத்தையா இடையிட்டு முகவையில் விழாவை நடத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறார்.)