சாத்தையா கேட்டுக் கொண்டபடி
முகவையில் நடைபெறும். திருவள்ளுவர் படம்
சப்பரத்தில் வைத்து எடுத்துவரப்பட வேண்டும்.
இசையரங்கு அமைப்பு மாநாட்டில் நடைபெற்றது
சரியில்லை. அது போதாது. நான் சில பாடல்களைக்
கட்டி வைத்துள்ளேன்.
இசை பலவகைப்பட்டது. தியாகராசர் இசை
தலைமையானது. கொடிவழியில் அது மூன்றாம் தலைமுறையது.
உயர்ந்த மெட்டுக்கள் இசைவடிவில் இருத்தல் கூடாது.
இசைப்பா வடிவில் வேண்டும்.
தண்டபாணி தேசிகர்,
கீழவெளியூர்............, சோமு மூவரையும் அந்த
மாநாட்டில் பாடச் செய்ய வேண்டும். கருநாடக இசை
என்பது தமிழிசை தான். ஆரோகணம் அவரோகணம்
என்னும் சொற்களைத் தமிழில் ஆரோசை, அமரோசை
(பெரிய புராணம்) என்று வழங்க வேண்டும். அடிப்படைச்
சொற்கள் தமிழே.
12000 பண்கள் அக்காலத்தில் இருந்தன
300 பண்களையே இன்று பாட முடியும்.
வேலூரில் ஓர் அம்மையார் சிறப்பாகப்
பாடுகின்றார்கள்.
முத்தையா செட்டியாரே
வியப்படைந்தார்.
தெம்மாங்கு இசைகூட முறையானதுதான்.
எனவே இதையும் Scientific
Music என்று சொல்லலாம்.
இசை வளர்ச்சிக்கு அரசுதான் பணிசெய்ய
வேண்டும். கால மெல்லாம் தி.மு.க. இருந்தால் தமிழ்
கெடாது; ஆகுல் வளராது. பேராயம் இருந்தால் வாழ்வும்
இல்லை. வளமும் இல்லை. பாலூட்டும் போதே பேராயக்
கட்சியைத் தலையெடுக்க விடாமல் தடுக்கும்
உணர்வையும் ஊட்ட வேண்டும்.
அகரமுதலி திருத்தப்பட்டாலொழிய
வளர்ச்சியில்லை. 1982-இல் நிலைமாறலாம். 10000 பேரை
உறுப்பினராகச் சேர்த்தால் மதிப்பிருக்கும்.
(பரமக்குடியில் உ.த.க. மாநாடு
நடைபெறுவதற்குமுன்
திருச்சிராப்பள்ளி அசோகா உண்டிச் சாலையில்
உ.த.க. செயற்குழுக்
கூட்டத்தில் பாவாணர் ஆற்றிய பொழிவு)
குறிப்பெடுத்து விரித்தவர் - அருள், செல்லத்துரை
|