வேதம் என்கிறது ஆரிய வேதமன்று, அது
எழுதப்பட்டிருக்கிற மொழி தூய ஆரிய மொழியன்று
என்பதை முதலாவது நீங்கள் அறிய வேண்டும்.
ஆரியர்கள் இந்தியாவில் கால்வைக்கு
முன்னாலே-கிரேக்கத்திற்கு மிக நெருங்கிய ஒரு
மொழியைப் பேசியிருக்கலாம். அதிலும்கூட தமிழ்ச்
சொற்கள் இருக்கத்தான் செய்கின்றன.
அவற்றுள்ளே தா என்று ஒரு
சொல்லிருக்கிறது. அது ஒரு வினைச் சொல். மயில்
என்று ஒரு சொல். உலகம் என்று ஒரு சொல் இருக்கிறது.
இவை சாலமோன் காலத்தைவிட மிகப் பழமையானவை
என்று நாம் கொள்ளலாம்.
தா என்றால் தருவது; அவ்வளவுதான்
பொருள். அது, ததா என்று இருக்கிறது
சமற்கிருதத்திலே. த்தோ என்றிருக்கிறது இலத்தீ
னிலே. அதிலிருந்துதான் தோணம், தோணி, தோணர்
என்ற சொல் லெல்லாம் பிறக்கும். தானம்
என்றாலும் தோணம் என்றாலும் இரண்டும் ஒன்றுதான்.
சமற்கிருதத்தில் தானம் என்றே இருக்கிறது. ஆனால்,
தா என்ற சொல் இப்படிப் பல மொழிகளிலே
இருக்கிறது.
இதைத் தமிழ் என்று எப்படிச்
சொல்லலாம் என்றால், தமிழிலே அந்தச்
சொல்லானது ஒரு சிறப்புப் பொருளை உணர்த்துகிறது.
ஆனால் பிற மொழிகளிலே பொதுப் பொருளைத்தான்
உணர்த்துகிறது. என்ன சிறப்புப் பொருள் என்றால்,
தொல்காப்பியத்திலே, அந்த எச்சவியல் என்ற
பகுதியிலே, சொல்லப்பட்டிருக்கிறது.
ஈ தா கொடுவெனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகிடன் உடைய
அவற்றுள்,
ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே,
தாவென் கிளவி ஒப்போன் கூற்றே,
கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே
(சொல். 444-7)
கிளவி ஆக்கம் என்கிற பகுதியிலே
இன்னொரு சிறப்பும் குறிக்கப் பட்டிருக்கிறது. அது
என்ன வென்றால், தருசொல், வருசொல்,
"செலவினும் வரவினும் தரவினும் கொடையினும்,
நிலைபெறத் தோன்றும் அந்நாற்
சொல்லும்
தன்மை முன்னிலை படர்க்கை யென்னும்
அம்மூ விடத்தும் உரிய என்ப".
(தொல். சொல். 28)
தா என்ற சொல் எனக்குத் தந்தான்
என்று தன்மையிலும் - உனக்குத் தந்தான் என்று
முன்னிலையிலும் வரும்-எனக்குத் தந்தான் என்றுதான்
சொல்ல வேண்டும். படர்க்கையில்
சொல்வதென்றால் கொடுத்தான் என்றுதான் சொல்ல
வேண்டும். இப்படியெல்லாம் வேறுபாடு - சிறப்பு
|