பக்கம் எண் :

தமிழின் தொன்மை51

இருக்கிறது அந்த தா என்ற சொல்லைப் பற்றி. ஆனால், சமற்கிருதத் திலோ - இலத்தீனிலோ அந்த வேறுபாடில்லை.

வெள்ளம் என்ற சொல், புதுப் பெருக்கு நீரைக் குறிக்கிறது: அது தமிழ். மலையாளத்தில் எல்லாம் வெள்ளம்தான். எங்கிருந்தாலும் வெள்ளம் தான். சிறு கொட்டாங்கச்சியிலே இருந்தாலும் அது வெள்ளம் தான். நமக்கு அப்படியல்ல, புதுப்பெருக்கு நீர்தான் வெள்ளம்.

செப்புதல் என்றிருக்கிறது. விடை சொல்வதைத்தான் தமிழிலே செப்புதல் என்கிறோம். தெலுங்கிலே பொதுவாக எதைச் சொன்னாலும் செப்புதல் என்பதையே குறிக்கும். இப்படிச் சிறப்புச் சொல்-சிறப்புப் பொருளானது வேறுபடுத்திக் காட்டுகிறது. அது தமிழினுடைய செம்மையைச் சிறப்பித்துக் காட்டுகிறது.

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பொன்விழா உரை
- செந்தமிழ்ச் செல்வி