7
தமிழன் பிறந்தக தீர்மானிப்புக்
கருத்தரங்கு
அவைத்தலைவர் அவர்காள்! புதுப்புனைவர்
கோ. து. நாய்க்கர் அவர்காள்! பேராசிரியர்காள்!
இங்குக் கூட்டப் பெறும் இக்கருத்தரங்கு
உலகத் தமிழ்க் கழகத்தின் சார்பில் கூட்டப்
பெறுகின்றது. இதற்குப் பேராசிரியர்கள் பலரையும்
அழைத்திருந்தோம். ஆனால் மிகவும் பொறுப்பு
வாய்ந்த தமிழின்பால் அக்கறை கொண்ட
பேராசிரியர்கள் சிலர்தாம் இங்கு
வந்திருக்கின்றனர். இக் கருத்தரங்கு தமிழன்
பிறந்தகத்தைத் தீர்மா னிக்கும் கருத்தரங்கு
ஆகும். ஆரியர்கள் இந்த நாட்டுக்கு வருதற்கு முன்பே
இந் நாவலந்தீவு முழுவதும் பரவியிருந்தவர்கள்
பழந்திரா விடர்கள் என்றுதான் எல்லா
நடுநிலையாளர்களும் சொல்லி வருகின்றார் கள்.
அவர்களையும்கூட இக்காலத்தில் சிலர் மறுக்கத்
தொடங்கியி ருக்கின்றார்கள்.
நான் மொழித்துறையில் மட்டும்,
மறைமலையடிகள் இல்லாத இக் காலத்திலே, இவ்வுலகத்
தமிழ்க்கழகத்தை ஆற்றுப்படுத்தி வருகின் றேன்.
மறைமலையடிகள் இருந்திருந்தால் நான் அவரின்
தொண்டராக - அடித்தொண்டராக இருந்திருப்பேன்.
அவர்கள்தாம் இந்தத் தனித்தமிழ் உணர்ச்சியை
நமக்கு ஊட்டியவர். நீண்ட காலமாக நம்
தமிழ்மொழியானது மிக மறையுண்டும் புதையுண்டும்
கிடந்தது. போன நூற்றாண்டிலே கால்டுவெல்
என்கின்ற வெளிநாட்டு ஆராய்ச்சியறிஞர் இத்
தென்னாட்டிலே வந்து, ஓர் அரை நூற்றாண்டு
திருநெல்வேலியில் தங்கியிருந்து, ஆராய்ந்து
திரவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் ஓர்
இலக்கண நூலை இயற்றினார்கள். அவர்கள்
காலத்திலே, பெரும் தமிழ்ப் புலவர்களுக்கே,
அஃதாவது தமிழ் அதிகாரிகள் என்று சொல்லத்
தக்கவர்களுக்கே, பண்டைத் தமிழ் நூற்கள் என்று
சொல்லப் பெறுகின்ற கழகநூற்கள் எவை என்று
தெரியாவாம். திரிசிரபுரம் என் கின்ற
திருச்சிராப்பள்ளியிலிருந்து, பர். உ. வே.
சாமிநாதையர் அவர் களுக்கும் ஆசிரியராகவிருந்து
கற்பித்த பெரும்புலவர் மீனாட்சி சுந்தரனார்
அவர்களுக்குக் கழக நூற்கள் என்றால் என்னவென்றே
தெரியாதாம். அந்தநிலை இந்தத் தமிழ் நாட்டிலே
இருந்தது.
அந்தக் காலத்திலே - அஃதாவது காரிருள்
சூழ்ந்த அந்தக் காலத்திலே - வழி தெரியாத ஒருவர்
தன்னந்தனியாகச் சென்று ஆராய்வது
|