போல் கால்டுவெலார் ஆராய்ந்து பல
உண்மைகளைக் கண்டுபிடித்தார். தமிழன்
மேனாட்டிலிருந்து வந்தவன் என்ற தவறான ஓர்
அடிப்படைக் கொள்கையை அவர்
கொண்டுவிட்டதினாலே சில உண்மைகளை அவர் அறிய
முடியவில்லை. உயர்ந்த நாகரிகம் ஆரியருடையது என்று
சொல்லி விட்டார். கொற்கையிலேதான் தமிழ்
நாகரிகம் தோன்றியது என்றும் சொல்லிவிட்டார்.
அவர் காலத்திலே தொல்காப்பியம் போன்ற
நூல்கள் இல்லை. அது மறைந்து கிடந்தது. நன்னூலும்
திருக்குற ளுந்தாம் பயிலப் பெற்று வந்தன.
அதனால், அவர் மற்ற பண்டை நூல்களை அறியாததினாலே
தமிழர் மேல் நாட்டிலிருந்துதான் வந்தி ருக்க
வேண்டும் என்ற தவறான கொள்கையைக் கொண்டு
விட்டார். அவ்வாறிருந்தும் தமிழ் மொழியானது
ஆரியத்திற்கு முந்தினதே என்று மிகத் தெளிவாகப்
பல இடங்களில் சொல்லியுள்ளார்.
அதற்குச் சிறப்பாக அவர் எந்த
அடிப்படையை எடுத்துக் கொண்டார் என்றால்,
மொழியின் சொல் தொகுதியிலே, மூவிடப்
பெயர்கள் இருக்கின்றனவே, அவற்றில் சுட்டுச்
சொற்களையே எடுத்துக் கொண்டார். அவற்றை வைத்து,
தமிழ்மொழிதான் ஆரியத்திற்கு மூலம் என்று
சொல்லுகிறார். பலர் இதை இன்னும் சரியாகப்
படிக்கவில்லை என்று நான் கருதுகின்றேன்.
கால்டுவெல் எழுதிய அந்த ஒப்பியல் இலக்கணத்தைத்
திரும்பவும் சரியாகப் படித்துப் பாருங்கள். அதில்
அந்தக் கருத்தைப் பலவிடங்களில் வலியுறுத்திச்
சொல்லியிருக்கின்றார். "மாந்தனின் முதல்
பெற்றோர் - மொழியினின்று வழி வழி வந்தவர் -
கூறியவையாகக் கருதும் ஒரு சொல் தொகுதியானது
திரவிட மொழிகளில் இன்னும் வழங்கி வருகின்றது"
என்று அவர் கூறியிருக்கின்றார். அது மிகவும்
உண்மை. அவர் எந்த அடிப் படையில் அதை
ஆராய்ந்தார் என்றால், இந்தக் கொடிவழி
முறையில் ஆராய்ந்துள்ளார்.
மொழியாராய்ச்சி இருவகைப்பட்டது.
ஒன்று கொடிவழி முறை என்பது; இன்னொன்று வடிவியல்
முறை; அஃதாவது Morphological
முறை. கொடிவழி முறை என்பது Genealogical.
இந்தக் கொடிவழி முறையில்தான் உண்மையை அறிய
முடியும். மேலையாராய்ச்சியாளர்க ளெல்லாரும்
இந்தக் காலத்திலே ஆரியத்தை அடிப்படையாக
வைத்து, அதன் மூலத்தைக் காண முடியாமல் குன்று முட்டிய
குருவி போல இடர்ப்பட்டு, "எல்லாமொழிகளும்
இடுகுறித் தொகுதிகளே; அஃதாவது ஒவ்வொரு மொழியும்
அடிப்படைச் சொற்கள் உட்பட ஆயிரம் ஆண்டுகளுக்கு
ஒரு முறை முற்றிலும் மாறிவிடுகின்றது; அதனால் இற்றை
நிலையை வைத்து, நாம் பண்டை நிலையை அறிய
முடியாது" என்று ஒரு தவறான முடிவுக்கு
வந்திருக்கின்றார்கள். அதற்கு அவர்கள் ஆங்கில
மொழியையும் அடிப்படையாக வைத்துக் கொண்டிருக்
கின்றார்கள். அவர்களுடைய முறையை எடுத்துச்
சொல்வதானால், ஓர் உவமையால் உங்களுக்கு
விளக்கலாம். அவர்கள் வரலாற்றுத்
|