பக்கம் எண் :

104மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

    ஆரிய மொழிகளிலுள்ள செந்தமிழ் வேர்ச்சொற்களை, எனது
ஒப்பியன் மொழிநூல் மூன்றாம் மடலத்திற் பரக்கக் காட்டுவேன். இங்கு
ஆங்கிலக் குறியீடுகளின் அமைப்பெளிமையை மட்டும் விளக்குதற்கு,
சேம்பரார் (Chambers) ஆங்கிலச் சொல்லியல் அகராதியினின்றும் சில
சொல் விளக்கங்களை எடுத்துக்காட்டுகிறேன்.

     (1) Alum: a mineral salt (cf. அளம் = உப்பு)

        L. alumen

       Alumina : one of the earth. L. alumen, alum.

        Aluminium : the metalic base of alumina.

     (2) Candidate: so called because at Rome, the applicant
        used to dress in white.

        L. candidus, white-candeo (cf. காந்து), to shine.

     (3) Chancellor: Low L. cancellarius, orig. an officer that had
        charge of records, and stood near the cancelli (L.) the
        cross-bars that surrounded the judgement-seat.

     (4) Electric: having the property of attracting and repelling
        light bodies when rubbed.

     L. electram-Gk. electron, amber (cf. அம்பா) in which the
        above property was first observed.

     (5) Protein: the common radical of the most essential
        articles of food.

     Gk. protos, first, and suffix -in.

     கலைச்சொற்களைத் தனித்தமிழிலேயே யாத்தல்வேண்டும். அவ்
யாப்புக்கூடாத ஒரோ வழி மட்டும் அயன்மொழித் துணை வேண்டப்படும்.
இது எல்லா மொழிக்கும் பொது.

     மொழிபெயர்ப்புத் திறனில் தமிழ் எம்மொழிக்கும் இளைத்ததன்று.
தனித்தமிழில் குறியீட்டுக்காகப் புனைதற்கு, வழக்கற்ற சொற்களை
வழக்கிற்குக் கொணர்தல் வேண்டும். வழங்காமலே சொற்கள்
வழக்கறுகின்றன. தமிழ்நாட்டின் வடபாகத்தில் வழங்காத துப்புரவு (=சுத்தம்)
என்னும் தென்சொல் தென்பாகத்திலும், தென்பாகத்தில் வழங்காத
நூக்கு(=தள்) என்னும் தென்சொல் வடபாகத்திலும், தமிழில் வழங்காத
நெய்த்தோர் என்னும் தென்சொல் தெலுங்கில் நெத்துரு என்றும்
வழங்குவதை நோக்குக. அன்றியும் தமிழ்ச்சொல் லிருக்க அயற்சொல் நாடல்,
கையில் வெண்ணெயிருக்க நெய்க் கலைவதும், ஏதிலார் ஆரத் தமர் பசிக்க
விடுதலுமாகும்.

     தமிழிற் கலைச்சொற்க ளாக்கும்போது, ஏற்கெனவே ஆங்கில நேர்
தென்சொற்களிருக்குமாயின் எளிதாய் மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.