பக்கம் எண் :

குன்னம் சிதம்பரம் பிள்ளை 105

அங்ஙன மில்லாவிடத்துமட்டும் புதுச்சொற்கள் புனையப்படும். அப்
புனைவுக்கான நெறிமுறைகளாவன:

     1. ஒரு பொருளுக்கு ஏதேனும் ஒரு காரணம்பற்றிப் பெயரிடலாம்.
அக் காரணம், ஒரு சிறிதே பொருந்துமேனும் அமையும். அதே காரணம்
பிற பொருளுக்கு ஏற்குமா என்று கவனிக்கவேண்டுவதில்லை.

     அல்வியன்மை(அவ்வியாப்தி), மிகுவியன்மை (அதிவியாப்தி) என்னுங்
குற்றங்கள் வரையறைக்கே (definition) யன்றிச் சொற்கில்லை.

     2. பல பொருளுக்கு ஒரே காரணம் ஏற்பின் அவற்றின் பெயர்கள்
வெவ்வேறா யமையும்படி, ஒருபொருட் பலசொற்களை ஆளவேண்டும்.

     எ-கா :வளையல் = வளைந்த அணி.

            கொடுக்கு = வளைந்த உறுப்பு.

            புரிசை = வளைந்த மதில்.

            குனிவு = முதுகு வளைதல்.

            பரிதி = வட்டமான சூரியன்.

     3. ஒரே சொல்லைப் பல பொருட்கு வழங்கின், பொருள்தொறும்
திரித்துக்கொள்ளவேண்டும்.

     எ-கா : கள்-கர் (வேர்) = கருப்பு, மறைவு.

     கர, கரம்பு, கரடி, கரந்தை (பூ), கரி, கரிசல், கரிச்சான், கரிசு, கரு,
கருகு, கருக்கு, கருத்தை, கருப்பை(எலி), கரும்பு, கருவல், கார், காரி முதலிய
சொற்களெல்லாம் கருமை என்னும் ஒரே கருத்தை அடிப்படையாகக்
கொண்டு விகுதி வேறுபாட்டால் வெவ்வேறு பொருளைக் குறிப்பன.

     4. ஒரே பொருளின் அல்லது கருத்தின் நுட்ப வேறுபாட்டைக்
குறிக்கவும் சொல்லைத் திரித்துக்கொள்ளலாம்.

     எ-கா :பரிசு = இகலி(போட்டியிட்டு)ப் பெறுவது.

            பரிசில் = இகலாது பெறுவது.

            பரிசம் = பெண்ணுக் களிப்பது.

     5. சொற்றிரிப்புப் பல வகைப்படும்.

     ஒன்பான் திரிபு, முக்குறை, மும்மிகை, போலி, இலக்கணப்போலி,
திரிபாகுபெயர்(தத்திதாந்தம்), மரூஉ முதலிய வெல்லாம் திரிபின்
வகைகளாம். இவை தனித்தும் கலந்தும் வரும்.

     எ-கா :கள்-(=கருப்பு)-களி (=கருமண், களிமண் போன்ற உணவு)-
          களிம்பு(=களிபோன்ற மருந்து-(ஈற்றுமிகை.)
           நந்து-நத்தை-(வலித்தலும் ஈற்றுமிகையும்)

  இர்-இரா, இரும், இருள், இரும்பு  
இறடி, இறுங்கு  
ஏனல், ஏனம்
யானை, (ஏனை)
பல்வகைத் திரிபு

     6. ஈறுகளைப் பொருண்மரபறிந்து புணர்க்கவேண்டும்.