ஒவ்வோர் ஈறும் ஒவ்வொரு அல்லது சிற்சில பொருள்களை மரபாகக் காட்டும். எ-கா :அல். செம்மல், கருவல், வள்ளல் - உடையோனை உணர்த்திற்று. வறுவல், நொறுவல் - செய்பொருளை உணர்த்திற்று. ஆடல் - தொழிலை உணர்த்திற்று. தோன்றல் - செய்வோனை உணர்த்திற்று. ஒரே பொருட்குப் பல ஈறும் ஏற்கும். ஈறு பெறுஞ் சொல்லின் இறுதிக்கேற்ப ஓர் ஈற்றைச் சேர்க்க வேண்டும். எச்சம், தோன்றல், ஓதுவான், விறகுவெட்டி, வெந்தை என்பவற்றி லுள்ள அம், அல், ஆன், இ, ஐ என்னும் ஈறுகள் செய்வோனையே குறித்தன. குற்றியலுகரச் சொற்களெல்லாம் செய்வோன் பொருளில் இகரவீற்றை ஏற்கும். எ-கா : தோன்றி, ஓதி, வெட்டி, இடுக்கி. 7. ஒரு பொருள் இன்னொன்றின் பெருமைப்பாடாயிருந்தால், பெருமையடைகளையும் ஈறுகளையும் பொதுமையான பொருட்பெயரோடு சேர்த்துக்கொள்ளலாம்.
எ-கா :நெருஞ்சில் - ஆனைநெருஞ்சில் |
 |
அடை |
நாவல் - பெருநாவல் | குன்று - குன்றம்- ஈறு. பெருமைப்பாட்டுப் பெயர்களைப் பெருமைப்பொருள் வேர்களி னின்றும் திரிக்கலாம். எ-கா : கடல், கடப்பான் படாகை. 8. ஒரு பொருள் இன்னொன்றின் குறுமைப்பாடாயிருந்தால், குறுமை யடைகளையும் ஈறுகளையும் பொதுமையான பொருட்பெயரோடு சேர்த்துக்கொள்ளலாம்.
எ-கா :அறை - கண்ணறை |
 |
|
|