பக்கம் எண் :

கனம் கிருஷ்ணையர் 53

    கோள் என்பதன் நேர்மூலம் கொள்.

     கொள் = (வி.) வளை, சுற்று, சுழல்.

     கொள் = (பெ.) வளைவு, வளைந்த காணக்காய், காணம்.

     "காயும் கோணக்காய் சொல்லடா மைத்துனா
      கதையும் விடுவித்தேன் கொள்ளடா மைத்துனா"

என்பது ஒரு விடுகதை உரையாட்டு.

     கொள்-கோள்(முதனிலை திரிந்த தொழிற்பெயர்) = கதிரவனைச்
சுற்றிவரும் கிரகம் எனினுமாம்.

     கொள் + பு = கொட்பு. கொட்பு = சுற்றுகை.

     கொள் என்னும் பகுதியினின்று , கொக்கி, கொண்டி முதலிய
சொற்களும், கொட்டு, கொடு முதலிய வழியடிகளும் பிறக்கும்.

     கொள்-கொட்கி-கொக்கி = வளைந்த கொளுவி.

     ஒ.நோ:A.S. hoc, hooc; D. hook; Ice. haki; Ger. haken; O.H.G.
           hako; L.G. hake; E. hook.

     கொள்-கொட்கு-கொக்கு=கொக்கிபோல் வளைந்த கழுத்தையுடைய
     பறவை.

     கொள்-கொண்டி. ஒ.நோ: வள்-வண்டி.

     கொண்டி = கொக்கி அல்லது வளையமுள்ள நாதாங்கி.

     கொள்-கொம்-கொம்பு = வளைந்த கிளை, கிளை, வளைந்த மருப்பு
     அல்லது கோடு.

     கொம்பு என்னும் சொல், தெலுங்கில் இன்றும் கொம்மு என்றே
வழங்கும்.

     ஒ.நோ: வள் - வம் - வம்பு.

     கொம்பு - கொப்பு. கொம்பு - கம்பு.

     கொள் - கொட்டு - கொட்டம். ஒ.நோ: வள் - வட்டு - வட்டம்.

    கொட்டம் = வளைவு, வட்டமான மாட்டுத் தொழுவம் அல்லது பட்டி,
நேர்மையில்லாத, அஃதாவது, நீதி நெறியினின்று கோணிய கொடிய
ஆரவாரம்.

     முதற் காலத்தில் ஆட்டுப் பட்டிகளும் மாட்டுப் பட்டிகளும் வட்ட
வடிவமாகவே அமைக்கப்பட்டன; பிற்காலத்தில் மழைக் காப்பிற்குக் கூரை
யமைந்தபோது கூடமாகக் கட்டப்பட்டன.

     கொட்டு + இல் = கொட்டில் = மாட்டுத் தொழுவம், தொழுவம்
     போன்ற கூடம், பட்டறை, ஆயுதசாலை.

     கொட்டு+அகை = கொட்டகை. கொட்டகை = தொழுவம், கூடம்.

     இன்றும் வடார்க்காட்டார் மாட்டுத் தொழுவத்தைக் கொட்டகை
     என்பர்.

     கொட்டு + ஆரம் - கொட்டாரம். 'ஆரம்' என்பது ஓர் ஈறு; கூடாரம்,
     வட்டாரம், பணியாரம் என்பவற்றிற் போல.