3 உலகத்தமிழ்ப் பேரவைகள் |
1.அனைத்துலகத் தமிழ்ப்பேரவை |
தகடூர்ச்(தருமபுரி) சித்தமருத்துவர் செல்லையா, அவர்கள், 1961ஆம் ஆண்டிலேயே `அனைத்துலகப் பேரவை` என்னும் பெயர்கொண்ட உலகத் தமிழ்ப் பேரவையைத் தோற்றுவித்தார். ஆயின், பொருட்டுணை இன்மையால் அவர் தமிழ்ப்பற்றும் ஊக்கமும் அதற்குமேல் வினையாற்ற வியலாதுபோயின. |
2. உலகத் தமிழ்ப்பேரவை |
உண்மையான தமிழ்ப்பற்றின்றி உலகப் புகழ்பெற வேண்டமென்பதையே குறிக்கோளாகக் கொண்ட அப்பர் (Father) தனிநாயகம், தமிழறியாத வரும் வடமொழி யார்வலருமான திரு.பில்லியோசா (J.Filliozat) என்னும் பிரெஞ்சுப் பேராசிரியரைத் தேடிப் பிடித்து, அவரைத் தலைவராகக்கொண்ட `உலகத் தமிழ்ப் பேரவை` என்னும் அமைப்பகத்தை 1965-ல் நிறுவினார். |
அர். தனிநாயகம் தமிழ்ப்பற்றற்றவர் என்பதற்குச் சான்றுகள்: |
(1) சென்னைப் ப.க.க.த. அகரமுதலியின் குற்றங்குறைகளை நான் நேரில் எடுத்துக் கூறியும் பொருட்படுத்தவில்லை; அவற்றைத் திருத்த எம் முயற்சியுஞ் செய்யவில்லை. |
(2) முதலுலகப் தமிழ்மாநாட்டுக் கருத்தரங்கிற்கு என்னை அழைக்கவேயில்லை. |
(3) இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டுக் கருத்தரங்கிலும், பலர் வேண்டுகோட்கிணங்கி என் பெயரைச் சேர்த்தும், எனக்குரிய இடந்தரவில்லை. |