பக்கம் எண் :

மொழிநூல்115

     தமிழ் மாநாடுகளைத் தமிழ்ப்பற்றுள்ள தமிழ்ப்புலவரே நடத்தத் தக்கார். அரசினர் உதவுநரும் ஊக்குநரும் அழைக்கப் பெறுநருமாகவேயிருத்தல் வேண்டும்.
செயற்குழு
  தலைவர்: மாண்புமிகு திரு.சி.என்.அண்ணாதுரையார், முதலமைச்சர், தமிழக அரசு
துணைத்தலைவர்கள்: பேரா.சே.பில்லியோசா, தலைவர் உலகத் தமிழாராய்ச்சி மன்றம்
மாண்புமிகு திரு.இரா.நெடுஞ்செழியனார், கல்வி அமைச்சர், தமிழகஅரசு.
திரு.மீ.பக்தவச்சலனார், முன்னாள் தமிழக முதலமைச்சர்,
அழைக்குநர்:திரு.ஆ.சுப்பையா, செயலாளர், உலகத் தமிழராய்ச்சி மன்றம், இந்தியக் கிளை.
உறுப்பினர்கள்: பேரா.சந்திரன் தேவநேசனார், முதல்வர், சென்னைக் கிறித்தவக் கல்லூரி.
திரு.கி.வா.சகந்நாதனார், ஆசிரியர், கலைமகள்.
பர்.(Dr).ஆல்பர்ட்டு பீ.பிராங்கிலின்.
திரு.அ.இராதாகிருட்டிணனார், ஆள்வினைஞர்,
இந்து அறநிலையத்துறை.
பொதுச்செயலாளர்:திரு.வே.கார்த்திகேயனார், சென்னைத் துறைமுகத் தலைவர்.
பொதுச்செயலாளர் - பொருளாளர்:திரு.வி.எசு.தியாகராசனார், தொழில் அதிபர்.
தனிஅலுவலர்: திரு.கி.வேங்கடசுப்பிரமணியனார், துணை இயக்குநர்(கல்வி), சிற்றூர் வளர்ச்சித்துறை.
உதவித்தனி அலுவலர்:திரு.கே.வி.சீனிவாசராகவனார்.
      இப் பதின்மூவருள் எனக்குத் தெரிந்தவரை இருவரே தமிழ்ப்புலவர். அவருள் ஒருவர் தமிழர்; இன்னொருவர் தமிழ்நாட்டுப் பிராமணர்.
      மீகான்மைக் குழுவில் (Steering Committee) பேச்சாளர் (Speaker) உட்பட அமைச்சரெல்லாரும் சேர்க்கப்பட்டதும், கடற்கரை