| 20. குமரிநாடே பழம் பாண்டிநாடாகக் கூறப்பட்டிருத்தலும், முதலிரு கழகங்களும் குமரிநாட்டிலேயே இருந்தமையும். |
| தமிழ் தானாகத் தோன்றிய இயற்கைமொழி |
சான்றுகள் |
| 1. தமிழ் முதுபழந் தொன்மையான குமரிநாட்டில் தோன்றியமை. 2. தமிழ் மூச்சொலியும் தனித்த முழங்கொலியும் இன்றிப் பெரும் பாலும் எளிய பதினெண் மெய்களைக் கொண்டிருத்தல். 3. மொழி வளர்ச்சியின் ஐந்நிலைகளையும் தமிழ் காட்டி நிற்றல். 4. எல்லாத் தமிழ்ச்சொற்களும் பொருள் குறித்தலும் இடுகுறிச் சொல் தமிழில் இன்மையும். 5. தமிழ்ச்சொற்களின் ஈறுகளும் உருபுகளும் முதனிலைகளினின்றும் பெயர்களினின்றும் எளிதாய்ப் பிரிக்கப் பெறுதல். 6. தமிழில் முதல்வேற்றுமை யுருபின்மை 7. தமிழில் இலக்கணப்பால் (grammatical gender) இன்மை. 8. தமிழில் இருமையெண் இன்மை. 9. தமிழ்ச்சொற்றொடர்களின் இயற்கை முறை. எ - டு: தமிழ் வடமொழி ஆங்கிலம் பன்னிரண்டு துவாதசம் twelve 10. தமிழ் தோன்றி வளர்ந்தவகை இன்றும் அறியப்பெறுதல். |
| தமிழே உலகமுதல் தாய்மொழி |
| சான்றுகள் |
| 1. தமிழ் குமரிநாட்டில் தோன்றியமை. 2. பழந்தமிழ் திரவிடமொழிகட்குத் தாயாயிருத்தல். 3. ஆரிய மொழிகளாகக் கருதப்படும் வடநாட்டு மொழிகளின் அடிப்படை தமிழாயிருத்தல். 4. மேலையாரிய மொழிகளிலும் அடிப்படைச் சொற்கள் பல தமிழா யிருத்தல். |