பக்கம் எண் :

மொழிநூல்87

(1) அல்காங்குவியன் மொழிகள் (Algonquian Languages)
      இவை கீழைக் கரையிற் கேரோலினாவிலிருந்து வடக்கே லேபிர டார் வரை பேசப்பட்டன.
(2) நாச்செசு-மசுக்கோசியக் குடும்பம்(Natchez - Muskogeam)
      இது தென்கிழக்கு ஒன்றிய நாடுகளிற் பேசப்பட்டது. இது அமெரிக்க மொழிக்குடும்பங்கள் எல்லாவற்றுள்ளும் பெரியது.
(3) இரேக்குவாயக் குடும்பம் (Iroquoian)
      இதன் முதன்மைப் பகுதி திரு இலாரென்சுப் பள்ளத்தாக்கு நடுவிலும் கீழைப் பென்சில்வேனியாவிலும் பேசப்பட்டது.
(4) சியௌவக் குடும்பம் (Siouan)
      இது வடக்குப் பெருவெளி நிலங்களிற் (Great Plains) பேசப்பட்டது.
(5) கதோவக் குடும்பம் ( Caddoan)
      இது சியௌவக் குடும்ப நிலப்பரப்பிற்குத் தெற்கிற் பேசப்பட்டது.
(6) துனிக்கக் குடும்பம் (Tunican)
      இது மிசிசிப்பிப் பள்ளத்தாக்கின் கீழ்ப்பகுதியிற் பேசப்பட்டது.
(7) யுச்சிக் குடும்பம் (Yuchi)
      இது தெனெசீயிற் பேசப்பட்ட ஒற்றைமொழிக் குடும்பம்.
(8) எசுக்கிமோ-அலியத்து மொழிகள் (Eskimo-Aleut Is)
      இவை வடமுனைக் கரைகளிலும் அவற்றையடுத்த கரைகளிலும், இலேபர்டாரிலிருந்தும் கிரீன்லாந்திலிருந்தும் அலாசுக்காவரை பேசப்படுகின்றன.
(9) சலிசம்(Salishan), வக்கசம்(Wakashan) சிமக்குவம் என்னும் முக்குடும்பங்கள்
      இவை வடமேற்கில் கொலம்பியா ஆற்றுப் பள்ளத்தாக்கிலிருந்து அலா சுக்காவரை பேசப்படும் மொழிகளுட் பெரும்பாலனவற்றைக் கொண்டன.
      ஏனையவற்றுள் நான்கு ஒற்றைமொழிக் குடும்பங்களும் உள்ளன. அவை அலாசுக்காவிற் பேசப்படும் ஐதாவும் (Haida) திலிங்கித்தும் (Tlingit),