| (6) மணியொலிக்கொள்கை(Ding-dong Theory) |
| இது, மணியடித்தவுடன் ஒலியெழுவதுபோல் கருத்துத் தோன்றிய வுடன் சொல் வெளிப்படும் என்பது. இது மாக்கசு முல்லர் கொண்டு பின்பு விட்டுவிட்டது. சொல்லிற்கும் பொருளிற்கும் இயல்பான தொடர்புண்டு என்னும் வழூஉக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது இது. |
| (7) அயாவுயிர்ப்புக்கொள்கை (Yo-he-ho Theory) |
| இது, மக்கள் கூடி உடலை வருத்தி ஒரு வேலையைச் செய்யும் போது மூச்சடக்கி வெளியிடும் ஒலிகளால் மொழி தோன்றிற்றென்பது. இது நாய்ரே கொள்கை. |
| (8) சைகைக்கொள்கை(Gesture Theory) |
இது, கருத்தறிவிக்கும் இரு வாயில்களுள் சைகை முந்தியது என் றும், ஒலிவடிவான மொழி அதன் வழிப்பட்டதென்றும், கூறுவது. சைகையில்லாமல் ஒலியும் ஒலியில்லாமற் சைகையும் இருதிணை யுயிர் களிடத்தும் தோன்றுவதால், இவ் விரண்டிற்கும் ஒன்றுபட்ட உறவு இல்லை யென்பது தெளிவு. ஒலியொடு கூடிய வாய்ச் செய்கையால் மொழி தோன்றிற்று என்பது (Mouth gesture theory) சைகைக் கொள்கையின் மற்றொரு வகை. இதைக் கொண்டவர் ரிச்சார்டு பேகெற்று. |
| (9) தொடர்புக்கொள்கை(Contact Theory) |
இது, முதலில் பிறரொடு தொடர்புகொள்ளக் குரலிடுவதும், பின்பு பொதுவாகக் கரைவதும். அதன்பின் ஒருவரைச் சிறப்பாக விளிப்பதும், அதன்பின் ஒன்றைச் செய்ய ஏவுவதுமாக மொழி தோன்றிற்று என்பது. இது ரெவெசு (Revesz) கொள்கை. இது, பிறரொடு தொடர்பு கொள்வதில் நேரும் உளநிகழ்ச்சிகளை வரிசைப்படுத்திக் கூறுகின்றதேயன்றி, மொழி தோன்றிய வகையை விளக்குகின்றிலது. |
| (10) பாட்டொலிக்கொள்கை(Musical Theory) |
| இது, முந்தியல் மாந்தர் வினைமுடிவில் தம் கருத்தைப் பாட்டொலியாக அல்லது இன்னிசையொலித் தொடராக வெளிப்படுத்தினர் என்றும், |